Dogs vs Children: 'நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தைகளை கடிப்பது நியாமா?’ ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சரமாரி கேள்வி!
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி முகாம் சென்னை மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்றது.
'நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தைகளை கடிப்பது நியாமா?’ என விலங்கின ஆர்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி முகாம் சென்னை மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்றது.
இந்த முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் போது, பிறருக்கு பாதகம் வரும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ’நாயை நாய் என்று சொல்லாதீர்கள் குழந்தைனு சொல்லுங்க’ என்கின்றனர். நம்ம குழந்தைய இன்னொரு குழந்தைய கடிக்க விடுவோமா! அப்படி செய்தால் அவர்கள் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா? என்பதை நாய் வளர்ப்போர் சிந்திக்க வேண்டும்.
இன்று 150 நாய்களுக்கு தடுப்பூசி போடபட உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் தின தோறும் 50 முதல் 66 எண்ணிக்கைகளில் கருத்தடை பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். நாய்கள் பிரச்னை குறித்து தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து பிறகு வல்லுனர்கள் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும். தொடர்ந்து நாய்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாய்களை வளர்ப்போர் செல்லப்பிராணிகளுக்கு சென்ஸ் வாங்குவது கிடையாது. நாய்களை வெளியே எடுத்து செல்ல கூடாது என்று பலமுறை எச்சரித்தும் நாய்களை வெளியே எடுத்து செல்கிறார்கள். செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு பொறுப்பும், மற்றொருவருக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்கிற எண்ணமும் முக்கியம்.
விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு
ராயபுரம் மண்டலத்தில் 2 லட்சத்திற்கும் மேல் தெருநாய்கள் எண்ணிக்கை உள்ளது. இப்போது, உலக கால்நடை சேவை அமைப்பு, தமிழ்நாடு கால்நடை நலத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து விரைவில் சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள நாய்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை நடத்த உள்ளோம்.
நாய்க்கடிக்கான தடுப்பூசி ஆண்டுக்கு 20 ஆயிரம் என பதிவாகிறது. இது மனிதன் - விலங்கு மோதல் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சட்டத்தை மதிக்க கூடிய நிலையில் நாங்கள் உள்ளோம்.
சில நாய்களுக்கு சீற்றம் கொண்ட தன்மைகள் உள்ளது. சில நாய் இனங்களின் சீற்றத்தன்மை குறித்து பெயரோடு சொன்னால் விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நாய் கடிக்காது என்று சொல்வது தவறு
நாய் கடிக்காது என்பது தவறான கருத்து, நாய்கள் அதனை வளர்ப்பவர்களையோ அல்லது வீட்டில் இருப்பவர்களையோ கடிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மற்றவார்களை கடிக்கக்கூடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தலைநகரை அதிரவைக்கும் நாய்கள்
தலைநகர் சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புழல், லட்சுமிபுரம் டீச்சர் காலணி பகுதியை சேர்ந்த ஜோஸ்வா டேனியல் என்பவரின் 12 வயது மகன் கிளியோபஸ் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராட்வைலர், பாக்ஸை ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கிளியோபர் கடைக்கும் செல்லும் போது, பக்கத்து வீட்டின் கதவுகள் திறந்து இருந்ததால், வெளியே சுற்றி திர்ந்த இரண்டு நாய்களும் சிறுவனை நோக்கி ஆவேசமாக குரைத்து உள்ளன. இதனால் சிறுவன் அஞ்சிய நிலையில், சிறுவன் மீது பாய்ந்த நாய்கள் கடித்து குதறின.
இதனால் சிறுவனின் தலை, மார்பும் கழுத்து, கை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம் பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரை ராட்வைலர் இன ராய் கடித்து குதறியதில் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.