Today Top News: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; தூக்கப்பட்ட பும்ரா; பற்றி எரியும் விவசாயிகள் போராட்டம் - டாப் நியூஸ்!-delhi farmers protest ind vs eng 4th test trisha controversy today top news - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Today Top News: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; தூக்கப்பட்ட பும்ரா; பற்றி எரியும் விவசாயிகள் போராட்டம் - டாப் நியூஸ்!

Today Top News: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; தூக்கப்பட்ட பும்ரா; பற்றி எரியும் விவசாயிகள் போராட்டம் - டாப் நியூஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 21, 2024 07:33 AM IST

சென்னை மாநகராட்சியின் 2024-2025 -ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்கிறார்.

இன்றைய முக்கிய செய்திகள்!
இன்றைய முக்கிய செய்திகள்!

சென்னையில் தொடர்ந்து 641-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் 2024-2025 -ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய அரசின் திட்டங்களை ஆமை வேகத்தில் மாநில அரசு நிறைவேற்றுகிறது - அண்ணாமலை தாக்கு!

சினிமா:

ஜவான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன் தாராவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது சந்தீப் ரெட்டி வங்காவிற்கும் வழங்கப்பட்டது.

8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் - தமிழ்நாடு திரையரங்க மல்டிப்ளக்ஸ் சங்கத்தினர் வலியுறுத்தல்!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - சேலம் மேற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரினார்.

தேசம் - உலகம்

எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

2 வருடங்களாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர். ஏவுகணைகள், வெடி மருந்துகள் அதிக அளவு தேவை என உக்ரைன் பிரதமர் பேச்சு

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் - முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

விளையாட்டு

விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி - பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் யாரேனும் ஒருவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கும்!

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.