Eradication of Dengue: டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர் ராதாகிருஷ்ணன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eradication Of Dengue: டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர் ராதாகிருஷ்ணன்!

Eradication of Dengue: டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர் ராதாகிருஷ்ணன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 13, 2023 10:53 AM IST

இந்நிலையில் கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இம்மாதம் 31 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ஆணையர் ராதா கிருஷ்ணன்
ஆணையர் ராதா கிருஷ்ணன்

சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது. இருப்பினும் மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பீதி ஆக வேண்டாம்.

நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தி ஆகும். வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேகரித்து வகைக்கும் ட்ரம், தொட்டி போன்றவற்றை மூடியே வைக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனையை அணுக வேண்டும்.

3,317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிக்கத் தொடர் பணி மேற்கொள்ளப்படுகிறது;

இந்நிலையில் கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இம்மாதம் 31 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து அச்சத்தை போக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது டெங்க காய்ச்சல் பாதிப்பு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக உதவி எண்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகம் முழுதும் கொசு ஒழிப்பு பணிகளில் 23,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மேலும் 3,542 போ் கூடுதலாக பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உதவி எண்கள்

காய்ச்சல் பாதிப்பு, கொசு பாதிப்பு இருந்தால், 94443 40496; 87544 48477 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.