Rabies:ரேபிஸ் பரவும் முறை: நாய் கடித்த பிறகு தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவர் இறக்க முடியுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rabies:ரேபிஸ் பரவும் முறை: நாய் கடித்த பிறகு தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவர் இறக்க முடியுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Rabies:ரேபிஸ் பரவும் முறை: நாய் கடித்த பிறகு தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவர் இறக்க முடியுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Marimuthu M HT Tamil
Mar 15, 2024 04:49 PM IST

ரேபிஸ் சிகிச்சை எப்போதாவது தோல்வியடையக்கூடும் என்று நிபுணர் கூறுகிறார். வைரஸ் மிகவும் ஆபத்தானது மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும்.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் அல்லது பூனையால் கடிக்கப்பட்ட மனிதனுக்கு ரேபிஸ் பரவுகிறது
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் அல்லது பூனையால் கடிக்கப்பட்ட மனிதனுக்கு ரேபிஸ் பரவுகிறது (Freepik)

ரேபிஸ் வைரஸ் பாலூட்டிகளின் மைய நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு மட்டுமல்லாமல், இறுதியில் மூளையில் நோய், அதன்பின் மரணத்தை ஏற்படுத்துகிறது. 

21 வயதான ஒரு பெண் தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்த அவர், ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டபின்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார். இது நாடுமுழுவதும் அதிர்வலைகளை உண்டு செய்துள்ளது. 

ரேபிஸ் சிகிச்சை தோல்வியடையுமா?

ரேபிஸ் தொடர்பாக குருகிராமின் மாரெங்கோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் மோகன் குமார் சிங் கூறுகையில், "மருத்துவ ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் ரேபிஸ் சிகிச்சை எப்போதாவது தோல்வியடையக்கூடும். அத்தகைய ஒரு நிகழ்வில் சமீபத்தில் 21 வயது பெண் ரேபிஸ் தோல்வியால் இறந்துள்ளார். இந்த சம்பவங்கள் ரேபிஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையைப் பற்றிய தொடர்ச்சியான ஆய்வு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்கின்றன"

ரேபிஸ் என்றால் என்ன?

கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிதேஷ் குமார் கூறுகையில், "ரேபிஸ் என்பது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய வைரஸ் நோயாகும். இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மருத்துவ அறிகுறிகள் தோன்றியவுடன், ரேபிஸ் கிட்டத்தட்ட 100% ஆபத்தானது. 99% சூழ்நிலைகளில், ரேபிஸ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கு வீட்டு நாய்கள் காரணமாகின்றன. இருப்பினும், ரேபிஸ் வீட்டு விலங்குகளையும் காட்டு விலங்குகளையும் சமமாகப் பாதிக்கும். இது உமிழ்நீர் வழியாக மக்களுக்கும் விலங்குகளுக்கும் பரவுகிறது. பொதுவாக கடித்தல், கீறல்கள், முற்றிய சளி ஆகியவை மூலம் பரவுகிறது’’என்றார்.

ரேபிஸ் அறிகுறிகள்:

ரேபிஸ், ஆரம்ப அறிகுறிகள் லேசானவை. எந்த வகையான வைரஸ் தொற்றுநோயையும் ஒத்திருந்தாலும், விரைவில் நோய் மூளைக்கு முன்னேறி கவலை, குழப்பம், கிளர்ச்சி, சித்தப்பிரமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

மேலும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிதேஷ் குமார் கூறுகையில்,"ரேபிஸ் பரவும் தன்மை, அறிகுறிகள் வெளிப்படுவது முதல் வாரம் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். ரேபிஸின் முதல் அறிகுறிகள் காய்ச்சலைப் போலவே இருக்கலாம். இதில் பலவீனம், காய்ச்சல் ஆகியவை அடங்கும். கடித்த இடத்தில் அசௌகரியம், குத்துதல், அரிப்பு உணர்வு ஆகியவை இருக்கலாம். இந்த அறிகுறிகள் சில நாட்கள் நீடிக்கும். நோய் முற்றியநிலையில் பெருமூளை செயலிழப்பு, பதற்றம், குழப்பம் மற்றும் தெருவில் ஓடுதல் வரை இது முன்னேறும். நோய் தீவிரமடையும்போது மயக்கம், அசாதாரண நடத்தை, பிரமைகள், நீரைப் பார்த்து பயப்படுவது மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை அனுபவிக்கலாம். நோயின் கடுமையான காலம் பொதுவாக 2 முதல் 10 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. ரேபிஸின் மருத்துவ அறிகுறிகள் தோன்றியவுடன், நோய் ஆபத்தானது என்பதை உணரவேண்டும். உடனடி சிகிச்சை செய்யவேண்டும்" என்று டாக்டர் செட்டிவால் கூறுகிறார்.

ரேபிஸ் யாருக்கு வரலாம்?

"மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரேபிஸ் வரலாம். வெளவால்கள், நாய்கள், பூனைகள் போன்ற வீட்டு விலங்குகளும் ரேபிஸை மக்களுக்கு பரப்பக்கூடும். அதேபோல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்களுடன் தொடர்பு கொள்வது ஆகியவையும் ரேபிஸை பரப்பக்கூடும்" என்று டாக்டர் சிங் கூறுகிறார்.

"ரேபிஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு விலங்கால் யாராவது கடித்தாலோ அல்லது கீறப்பட்டாலோ, அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும். 

நோய்த்தடுப்பு (பிஇபி) எனப்படும் தடுப்பூசிகள், வைரஸ் பரவுவதையும் ரேபிஸாக மாறுவதையும் தடுக்கலாம்"என்று டாக்டர் சிங் கூறுகிறார்.

ரேபிஸை எவ்வாறு தடுப்பது?:

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் காட்டு விலங்குகளிடம் கவனமாக இருப்பது முக்கியம். இந்த நோயைத் தடுக்க நாய் கடித்த பிறகு உடனடி சிகிச்சை முக்கியம்.

"செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது, காட்டு விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் ஒரு விலங்கு உங்களைக் கடித்தவுடன் அல்லது கீறியவுடன் மருத்துவ உதவியைப் பெறுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ரேபிஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க முடியும். நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பூசியின் மதிப்பு குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதன் மூலம் ரேபிஸ் தடுப்பு குறித்த அறிவினை மேம்படுத்தலாம்" என்று டாக்டர் சிங் முடிக்கிறார்.

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ்அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.