Gold Rate : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்து விற்பனை.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!
Today Gold Rate : பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகின்றது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையிசென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.