Cauvery issue: தமிழ்நாட்டுக்கு 1 TMC தண்ணீர் தர முடியாது! 8000 கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும்!
Cauvery issue: தமிழகத்துக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 8000 கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறி உள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே நீண்ட நெடுங்காலமாக பிரச்னைகள் நிலவி வருகிறது. இரு மாநில மக்களுக்கும் முக்கிய ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகின்றது. தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு இருந்தது.
கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ஜேடி எம்எல்ஏ ஜிடி தேவகவுடா, விவசாய சங்கத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சித்தராமையா செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அண்டை மாநிலமான தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 8,000 கனஅடி நீரை இந்த மாத இறுதி வரை திறந்துவிட கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி படுகையில் உள்ள அணைகளில் 63 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது, இந்த நிலையில், தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப சித்தராமையா கூறினார்.
8,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனைவரின் கருத்தும் இருந்தது. மழை பெய்யவில்லை என்றால், தண்ணீர் திறப்பதை குறைக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்.
ஜூலை 12ம் தேதி தொடங்கி மாத இறுதி வரை தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் மோகன் காதர்கி பேச்சு
கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் மோகன் காதர்கி பேசுகையில், இம்முறை காவிரி ஆற்றில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 54 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது, காவிரி படுகையில் உள்ள மற்ற அணைகளில் 63 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது என சித்தராமையா கூறினார்.
ஜூலை 12ஆம் தேதி கபினியில் 5,000 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீர், சனிக்கிழமை பிலிகுண்டுலுவில் 5,000 கனஅடி நீர் திறக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
கபினி அணையின் நீர்ப்பிடிப்பு கொள்ளளவு காரணமாக நீண்ட நாள் தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால், ஜூலை 12-ஆம் தேதி 20,000 கனஅடியும், ஜூலை 13-ஆம் தேதி 19,000 கனஅடியும் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது என்று அவர் விளக்கினார்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன், ஒரு டிஎம்சி தண்ணீரை விட முடியாது என்று CWMA விடம் முறையிட வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.
"காவிரி நடுவர்மன்றத்தை அவமதிக்கும் வகையில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூற முடியாது. 8,000 கன அடி தண்ணீர் விடுவோம். நல்ல மழை பெய்தால் ஒரு டி.எம்.சி. தண்ணீர் விடலாம். இந்த முறை நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். குறிப்பிட்டார்.
2023-ம் ஆண்டு மிகக் குறைவான மழைப்பொழிவு கொண்ட ஒரு 'பேரழிவு ஆண்டு' என்று முதல்வர் கூறினார்.இந்த ஆண்டில் 177 டிஎம்சி தண்ணீர் விடுகிறோம், ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி தண்ணீர்தான் திறந்துவிட்டோம்.
டாபிக்ஸ்