தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: காயத்ரி மந்திரம்.. காவிரி ஆற்றின் ஓரம் பூத்த சிவபெருமான்.. சுயம்புவாக வந்த காயத்ரி லிங்கேஸ்வரர்

HT Yatra: காயத்ரி மந்திரம்.. காவிரி ஆற்றின் ஓரம் பூத்த சிவபெருமான்.. சுயம்புவாக வந்த காயத்ரி லிங்கேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 06:00 AM IST

HT Yatra: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில்.

காயத்ரி மந்திரம்.. காவிரி ஆற்றின் ஓரம் பூத்த சிவபெருமான்.. சுயம்புவாக வந்த காயத்ரி லிங்கேஸ்வரர்
காயத்ரி மந்திரம்.. காவிரி ஆற்றின் ஓரம் பூத்த சிவபெருமான்.. சுயம்புவாக வந்த காயத்ரி லிங்கேஸ்வரர்

உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன்வசம் வைத்திருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்தவருகிறது. மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய சோழனாக வாழ்ந்த ராஜராஜ சோழன் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்து அவருக்கு தஞ்சை பெரிய கோயிலை கட்டியுள்ளார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக இன்று வரை உலகத்தின் சரித்திர குறியீடாக அந்த கோயில் விளங்கி வருகிறது.

அதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்தவர். இந்த கோயிலில் மூன்று நதிகள் பாய்வதால் இது தீர்த்த சங்கமம் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு ராஜகோபுரத்தின் கீழ் சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவான் இருவரும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகின்றனர்.

இந்த திருக்கோயிலில் சகஸ்ர லிங்கேஸ்வரர் அமிர்தலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என அனைத்து மூர்த்திகளும் சேர்ந்து ஒருங்கிணைந்து காட்சி கொடுக்கின்றனர் அதனால் இது மூர்த்தி சங்கமம் என அழைக்கப்படுகிறது.

மந்திரங்களின் உச்சம் கொண்ட மந்திரமாக காயத்ரி மந்திரம் கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு வந்து ஒரு முறை சிவபெருமானின் முன் நின்று அந்த காயத்திரி மந்திரத்தை கூறினால் ஒரு லட்சம் முறை கூறியதற்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மூன்று நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் பவானி கூடு கரையில் காவிரி ஆற்றங்கரையின் ஓரத்தில் தனித்து நின்று காயத்ரி லிங்கேஸ்வரர் காட்சி கொடுத்தார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் சுற்றி லிங்கங்கள் இருக்கும். காவிரி கரையின் ஓரத்திலே காயத்ரி லிங்கேஸ்வரர் தனித்து நின்று காட்சி கொடுப்பதால் அவரை வணங்கி செல்வோருக்கு அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த திருக்கோயிலின் மூலஸ்தானம் வந்து சூரியன், குபேரர், பராசர முனிவர் என அனைவரும் வணங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் தல விருட்சமாக இலந்தை மரம் உள்ளது.

தல வரலாறு

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய தல விருச்சமான இலந்தை மரத்தின் அடியில் தான் பராசர முனிவர் ஆசிரமம் நடத்தி இறைவனை வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. சங்கமேஸ்வரரை வணங்குவதற்கு பராசர முனிவர் செல்வதற்கு முன்பாக அருகே காவிரி ஆற்றின் கரையில் தினமும் நித்திய கர்ம அனுஷ்டானத்தை பராசர முனிவர் செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து அதே இடத்தில் பன்னிரண்டாயிரம் கோடி முறை காயத்ரி மந்திரத்தை அவர் உச்சரித்த காரணத்தினால் காயத்ரி லிங்கேஸ்வரர் அங்கு சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. அதுதான் அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9