Tamil Live News Updates : தீபாவளி பண்டிகை - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates : தீபாவளி பண்டிகை - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

பிரேக்கிங் நியூஸ்

Tamil Live News Updates : தீபாவளி பண்டிகை - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

01:16 PM ISTNov 10, 2023 06:46 PM HT Tamil Desk
  • Share on Facebook
01:16 PM IST

Tamil Live News Updates: இன்றைய (10.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Fri, 10 Nov 202312:53 PM IST

தீபாவளி நாளில் லால் சலாம் பட டீஸர் வெளியீடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் டீஸர், நவம்பர் 12ம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகிறது

Fri, 10 Nov 202312:43 PM IST

தென் ஆப்பரிக்காவுக்கு 245 இலக்கு

தென் ஆப்பரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 244 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது

Fri, 10 Nov 202312:18 PM IST

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் காவல்துறை விசாரணை

சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Fri, 10 Nov 202312:04 PM IST

ஆன்லைன் ரம்மி திறமை அடிப்படையில் வராது - அமைச்சர் ரகுபதி

ரம்மி விளையாட்டில் திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மி திறமை அடிப்படையில் வராது. எனவே அதை தடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்

Fri, 10 Nov 202312:08 PM IST

பயணிகளுக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் வெளியூர் பயணிகள் புகார் தெரிவிக்க போக்குவரத்துக் கழக உதவி மைய எண் அறிவித்துள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

அதன்படி 1800 599 1500 அல்லது 149 என்ற கட்டணமில்லா 3 இலக்க உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்

Fri, 10 Nov 202311:41 AM IST

இன்று மாலைக்குள் ரூ.1,000 வரவு வைக்கப்படும் - மு.க.ஸ்டாலின்!

இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Fri, 10 Nov 202311:27 AM IST

புதுச்சேரியில் புதிய அமைச்சர் விரைவில் நியமனம்

புதுச்சேரியில் புதிய அமைச்சர் விரைவில் நியமனம் செய்யபடும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Fri, 10 Nov 202311:16 AM IST

வானதி சீனிவாசன் கண்டனம்!

சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறையில் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Fri, 10 Nov 202311:04 AM IST

தீபாவளி பண்டிகை -  சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

Fri, 10 Nov 202311:00 AM IST

விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும், பயிர்காப்பீட்டு தொகையை அரசே ஏற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Fri, 10 Nov 202310:47 AM IST

Chillanjirukkiye : ‘லப்பர் பந்து’ படத்தின் ‘சில்லஞ்சிருக்கியே’ பாடல்!

தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் ‘சில்லஞ்சிருக்கியே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

Fri, 10 Nov 202310:31 AM IST

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Fri, 10 Nov 202310:16 AM IST

மகளிர் உரிமைத்திட்டம்!

“மகளிர் உரிமைத்திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Fri, 10 Nov 202310:03 AM IST

பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு ரூ.63.61 கோடி முன்பணக் கடன்!

வேளாண்மை-உழவர் நலத்துறை-ஒன்பது கூட்டுறவு மற்றும் ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு சம்பள நிலுவைத் தொகை, இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு ரூ.63.61 கோடி வழிவகை முன்பணக் கடன் வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.

Fri, 10 Nov 202309:51 AM IST

Actor Krishna : கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்த கமல்ஹாசன்!

மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

Fri, 10 Nov 202309:39 AM IST

Manish Kashyap : யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து!

யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட  வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Fri, 10 Nov 202309:26 AM IST

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Fri, 10 Nov 202309:16 AM IST

Weather Update : அடுத்த சுற்று மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் காரணமாக வரும் 14 ஆம் தேதி முதல் தென் இந்தியாவில் அடுத்த சுற்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Fri, 10 Nov 202309:10 AM IST

Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fri, 10 Nov 202308:57 AM IST

அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது என்று அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

Fri, 10 Nov 202308:52 AM IST

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

Fri, 10 Nov 202308:19 AM IST

அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தை ஜாமீன்

Amar Prasad Reddy: கொடிக் கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Fri, 10 Nov 202308:02 AM IST

10 மாவட்டங்களில் இன்று கனமழை

Rain Alert: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fri, 10 Nov 202307:41 AM IST

ஆளுநரின் செயலாளருக்கு நோட்டீஸ்

Supreme Court: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Fri, 10 Nov 202307:26 AM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Northeast Monsoon: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 14% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் தற்போது வரை 249.6 மி.மீ மழை பதிவாக வேண்டிய சூழலில் 215.6 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 10 Nov 202307:19 AM IST

நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

Jigarthanda DoubleX: ஜிகர்தண்டா டபுள் X' படம் வெற்றி பெற வேண்டி, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார்.

Fri, 10 Nov 202306:53 AM IST

மகளிர் உரிமைத் தொகை

Kalaingar Magalir Urimai Thogai: மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை (நவ.10) 7.35 லட்சம் பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Fri, 10 Nov 202306:40 AM IST

சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Madras High Court:தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் டிச.12க்குள் பதிலளிக்க சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Fri, 10 Nov 202306:32 AM IST

அரியவகை ஆமைகள் பறிமுதல்!

Coimbatore: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வரப்பட்ட 11,000 அரியவகை ஆமைகள், சிலந்தி, ஓணான், பாம்பு உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Fri, 10 Nov 202306:29 AM IST

ஓபிஎஸ் மேல்முறையீடு - நவ.15க்கு ஒத்திவைப்பு

OPS case: அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்ட மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Fri, 10 Nov 202306:01 AM IST

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

CM MK Stalin: மருத்துவர்கள் இந்த வாரம் முழுக்க ஓய்வு எடுக்க சொன்னார்கள், ஆனால் மக்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை; தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்கக்கூடாது அதனால்தான் வந்துவிட்டேன் என சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Fri, 10 Nov 202305:56 AM IST

ஓபிஎஸ் மேல்முறையீடு - நவ.15க்கு ஒத்திவைப்பு

OPS: அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்ட மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு.

Fri, 10 Nov 202305:46 AM IST

மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி

CM MK Stalin: இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Fri, 10 Nov 202305:32 AM IST

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

Anitha Radhakrishnan:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2001-2006 அதிமுக அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக லஞ்சஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

Fri, 10 Nov 202305:19 AM IST

சென்னையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு

Crime: சென்னை பாரிமுனையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். பாரிமுனையில் உள்ள வீரபத்ரசாமி கோயில் அருகே கடை வைத்திருக்கும் முரளி என்பவர் மதுபோதையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Fri, 10 Nov 202304:55 AM IST

நீர்மட்டம் உயர்வு

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது.

Fri, 10 Nov 202304:48 AM IST

வைகையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

Vaigai: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

Fri, 10 Nov 202304:24 AM IST

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Fri, 10 Nov 202304:07 AM IST

விமான கட்டணம் உயர்வு

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Fri, 10 Nov 202304:06 AM IST

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

OPS: அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

Fri, 10 Nov 202303:38 AM IST

மலை ரயில் சேவை ரத்து

Ooty Train: நீலகிரி , உதகை - குன்னூர் இடையே ரயில் தண்டவளத்தில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை இன்று முதல் 13ம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

Fri, 10 Nov 202303:32 AM IST

கப்பலில் கேஸ் பைப் லைன் வெடித்ததில் ஒருவர் பலி

Accident: சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது மேற்கொண்ட போது கேஸ் பைப் லைன் வெடித்ததில் சகாய தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார்.

Fri, 10 Nov 202303:07 AM IST

தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

Special Train: தூத்துக்குடியில் இருந்து நவம்பர் 11 மற்றும் 13ம் தேதிகளில் மாலை 3:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:45க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்லும்.

Fri, 10 Nov 202302:59 AM IST

வானிலை மையம் அறிவிப்பு

Weather Update: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், கடலூர், சிவகங்கை ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது

Fri, 10 Nov 202302:33 AM IST

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

School Holiday: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 10 Nov 202302:33 AM IST

காரைக்காலில் விடுமுறை

School Holiday: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Fri, 10 Nov 202302:32 AM IST

ரூ.20 கோடி நகைகள் கொள்ளை

Crime: உத்தரகாண்ட், டேராடூனில் நகைக்கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Fri, 10 Nov 202302:32 AM IST

ஆடுகள் விற்பனை ஜோர்

Diwali sale: புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்ததால் விற்பனை அமோகம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.