தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Dmk: திமுக ஊழல் பட்டியலை நாளை வெளியிடுகிறார் அண்ணாமலை!

Annamalai vs DMK: திமுக ஊழல் பட்டியலை நாளை வெளியிடுகிறார் அண்ணாமலை!

Karthikeyan S HT Tamil
Apr 13, 2023 10:37 AM IST

DMK Corruction List: திமுக அமைச்சர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை நாளை வெளியிட போவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files என்ற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பற்றிய கேள்வி எழுப்பி அதன் விலை பற்றி கேட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14-ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்." என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ’DMK FILES’ எனும் திமுக ஊழல் பட்டியல் நாளை (ஏப்.14) காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்