தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவறான மருத்துவ டிப்ஸ் - சிக்கலில் சித்த மருத்துவர் ஷர்மிகா

தவறான மருத்துவ டிப்ஸ் - சிக்கலில் சித்த மருத்துவர் ஷர்மிகா

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2023 02:16 PM IST

தவறான மருத்துவ டிப்ஸ் தந்த குற்றச்சாட்டில் சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் இதுபோன்ற அறிவியலுக்கு புறம்பாக மருத்துவ குறிப்புகளை சமூக வலைதளங்களில் ஒரு மருத்துவர் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெய்சி சரணின் மகளும் சித்த மருத்துவருமான ஷர்மிகா, கவுந்து படுத்தால் புற்றுநோய் வரும், தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும். பீப் நம்மை விட பெரிய மிருகம் அதை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும் என்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பிறப்பது குறித்து அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்தார். குழந்தை பிறப்பதற்கு கடவுள்தான் மனசு வைக்க வேண்டும். பாலியல் உறவு வைத்துக்கொள்வது, உடல்நலக் குறைபாடு போன்றவை எல்லாம் 2 ஆம் தர காரணங்கள்தான். முதல் காரணம் என்பது இயற்கை உங்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பை தர வேண்டும். ஒருவர் செய்த தீமையான விசயங்களால் வாரிசு இருக்கக்கூடாது என்று நினைத்தால் இருக்காது. ஆனால், ஒரு நல்ல மனுசன், எந்த பிரச்சனை இல்லை என்றால் அடுத்தடுத்த மாசம் கிடைக்கும்." என்று கூறினார்.

இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர் ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பினார். கடந்த 2023 ஜனவரி-6 ம் தேதியிட்ட நோட்டீஸில், ‘பதிவுபெற்ற சித்த மருத்துவர் என். ஷர்மிகா, சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக 31.12.2022 அன்றைய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரை/ பல்வேறு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக பதிவாளர் முன்பு 24-01-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். ஷர்மிகா வழங்கிய மருத்துவ குறிப்புகள் சித்த மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முறைப்படி பதிவு செய்துள்ளாரா, அறிவியல் ஆதாரங்களோடு ஆலோசனைகள் வழங்கப்பட்டதா என்பது போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்