தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  A.r.rahman: உங்கள் குறைகளை குறிப்பிட்டு டிக்கெட் நகலை அனுப்புங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான்!

A.R.Rahman: உங்கள் குறைகளை குறிப்பிட்டு டிக்கெட் நகலை அனுப்புங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 11, 2023 12:31 PM IST

உங்கள் குறைகளை குறிப்பிட்டு டிக்கெட் நகலை மின்னஞ்சல் செய்யுங்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் பெய்த தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒத்திவைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிசென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நேற்று செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றதுது. மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நெரிசலை தவிர்க்க ஓஎன்ஆர் சாலையை பயன்படுத்தலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று நிகழ்ச்சி நடை பெற்ற போது உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கூட்டம் நிரம்பி வழிந்தது என ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் நிகழ்ச்சியின் போது ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று நிகழ்ச்சியை பார்க்கும் அவலம் ஏற்பட்டது. முறையாக இருக்கை வசதிகள் கூட செய்யப்பட வில்லை என ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் 25 ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்த 4 பேர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகே கூட செல்ல முடிய வில்லை என்ற தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படி ரசிகர்கள் பலர் தங்கள் வருத்தத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்