Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்! முதல்வர் உத்தரவை சொன்ன அப்பாவு!
Kallakurichi liquor deaths: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35 பேர் வரை உயிரிழந்து உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று உள்ளதால் இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.மாணிக்கராஜ், இ.ரவிக்குமார், டாக்டர் வி.தனராஜ், வ.சின்னசாமி, டாக்டர் ஏ.ராமகிருஷ்ணன், அ.கணேச மூர்த்தி, சு.சிவராமன், ச.வேணு கோபால், அ.கு.சி. அன்பழகன், இராம. வீரப்பன், ரா. இந்திரகுமாரி, ஹெ.எம். ராஜூ, சி.வேலாயுதன், த.மலரவன், த.ராசம்மாள், மோ.பரமசிவம், சி.ராமநாதன் உள்ளிட்டோர் மறைந்தது குறித்து சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.