Blue sattai Maran: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சூர்யா கப்சிப்! மிக்சர் ட்விட், மீம்கள் - தொடர் ட்ரோலில் ப்ளூசட்டை மாறன்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சூர்யா கப்சிப் ஆக இருந்து வரும் நிலையில், அவரது பழைய ட்விட் பதிவான "மிக்சர் சாப்பிடுவது நாம் தான்", மீம் பகிர்ந்து தொடர் ட்ரோலில் ஈடுபட்டு வருகிறார் ப்ளூசட்டை மாறன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 40 பேர் வரை பலியாகியிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டை சோகத்தில் ஆழத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதோடு, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கோலிவுட் நடிகர்கள் கப்சிப்
இந்த விவகாரம் தொடர்பாக கோலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் வாய் திறக்காமலும், எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுத்து வரும் நடிகர்களாக இருந்து வரும் சத்யராஜ், சூர்யா போன்றோர் இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ப்ளூசட்டை மாறன் ட்ரோல்
இதற்கிடையே பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கமல், சூர்யா, சத்யராஜ் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, ரஜினிமுருகன் பட பஞ்சாயத்து காட்சி மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்து கலாய்த்திருந்தார்.
அதன் பிறகு சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா? என குறிப்பிட்டு, உன்னை நினைத்து பட மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்தார்.
தொடர்ந்து, கடந்த 2017இல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிருபித்து முதலமைச்சர் ஆனபோது, நடிகர் சூர்யா " இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே..." என்று ட்விட் செய்திருந்தார்.
அந்த ட்விட்டை பகிர்ந்து, “Suriya in 2017” என ட்ரோல் செய்துள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கை
ப்ளூ சட்டை மாறன் ட்ரோலுக்கு அடுத்த சில மணி நேரங்களில் கமலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல், தமிழகத்தில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாதவாறு கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது இரங்கல் மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
அரசை நேரடியாக குற்றம்சாட்டிய விஜய்
இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்