AIADMK: நாளை நடைபெறும் அதிமுக மா.செ கூட்டம்: ஈபிஎஸ் யோசித்த புதிய கணக்கு!
அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நாளை நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அடிப்படையில் இருந்து தனது கட்சியைப் பலப்படுத்தப்பட்ட தொடங்கிவிட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்படும் விதம், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையைப் பலப்படுத்துவது தொடர்பான பல்வேறு பணிகளுக்கு வழிகாட்டுதல்கள், மகளிர் அமைப்புகளின் செயல்பாடுகளை சீராக்குவது உள்ளிட்டப் பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
மேலும் அதிமுக தலைமைக்கழகம் நாளை அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி கூறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் முன்னரே அறிவித்தபடி, எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை 21.11.2023 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு, ’எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலின்பெயரில் வெளியிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் இருந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்குப் பல்வேறு தேர்தல் வியூகங்கள் சொல்லப்படவுள்ளதாகவும், குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் நிலையை இன்னும் தீர்க்கமாக செலுத்த வழிகாட்டல்கள் இருக்கப்போவதாகவும் தெரிகிறது.
அதேபோல், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, பாஜகவை எப்படி எதிர்த்துப் பொதுவெளியில் பேசவேண்டும் எனவும், திமுக - காங்கிரஸை எவ்வாறு எதிர்த்துப் பேசவேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்களிடம் பேசவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.