Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு முதல் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு வரை - டாப் 10 நியூஸ்..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு முதல் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு வரை - டாப் 10 நியூஸ்..!

Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு முதல் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு வரை - டாப் 10 நியூஸ்..!

Karthikeyan S HT Tamil
Aug 13, 2024 01:48 PM IST

Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு, கமலா ஹாரிஸுக்கு எலான் மஸ்க் அழைப்பு, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு முதல் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு வரை - டாப் 10 நியூஸ்..!
Tamil Top 10 News: பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு முதல் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு வரை - டாப் 10 நியூஸ்..!

பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு: பாஜக முறையீடு

சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகல் 2:15க்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு என பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் முறையீடு செய்துள்ளார்.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி தொடக்கம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். 2025 ஜன.1ஆம் தேதிக்குள் 18 வயது நிறைவடைவோரும் இதில் பதிவு செய்யலாம். அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவம்பர் 28ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.95 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.  தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில், உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ரூ.44,125 கோடி மதிப்பில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 50,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த வால்வோ பேருந்து

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TNEA கவுன்சிலிங் 2024 சுற்று 2 தற்காலிக இருக்கை ஒதுக்கீடு முடிவு

TNEA கவுன்சிலிங் 2024 சுற்று 2 தற்காலிக இருக்கை ஒதுக்கீடு முடிவு இன்று ஆகஸ்ட் 13, 2024 அன்று வெளியிடப்பட்டது. முடிவை அறிந்து கொள்வதற்கான நேரடி லிங் இங்கே தரப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸுக்கு எலான் மஸ்க் அழைப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை இந்திய நேரப்படி இன்று காலை நேர்காணல் செய்திருந்தார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ள கமலா ஹாரிஸும் எக்ஸ் தள நேரலையில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் 3,000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 700 ஏஐ அடிப்படையிலான முக அங்கீகார கேமராக்களை நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் போலீஸ் குழுக்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.