Elon Musk: விந்தைகள் செய்யும் வினோத கிறுக்கன்! எதிர்கால உலகை கட்டும் தொழில் முனைவன்! எலான் மஸ்க் பிறந்த தினம் இன்று!
Success Story of Elon Musk: தென்னாப்பிரிக்காவில் ஆர்வமுள்ள சிறுவனாக இருந்து ஒரு முன்னோடி தொழிலதிபராக எலோன் மஸ்க்கின் பயணம் அசாதாரண சவால்களை கொண்டது. அவரது முயற்சிகள் விண்வெளி பயணம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதற்கு அப்பால் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்துள்ளது.
Elon Musk: விந்தைகள் செய்யும் வினோத கிறுக்கன்! எதிர்கால உலகை கட்டும் தொழில் முனைவன்! எலான் மஸ்க் பிறந்த தினம் இன்று! (REUTERS)
எலான் மஸ்க் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் தொலைநோக்கு தொழில்முனைவோர்களில் ஒருவராக பெயர் பெற்ற எலான் மஸ்க் சாதனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
எலோன் ரீவ் மஸ்க் என்ற பெயர் கொண்ட எலான் மஸ்க் ஜூன் 28, 1971 ஆம் ஆண்டிலி தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மீது தீராத ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார். தனது 12 வயதில், அவர் கணினி நிரலாக்கத்தை கற்றுக் கொண்டார்.
தனது பதின் பருவத்தில், கனடாவுக்கும், பின்னர் அமெரிக்காவும் எலான் மஸ்க் இடம்பெயர்ந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர், தொழில் முனைவில் ஈடுபட தொடங்கினார்.