Top 10 News : தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு.. எலி மருந்து விவகாரம்..இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு.. எலி மருந்து விவகாரம்..இன்றைய டாப் 10 நியூஸ்!

Top 10 News : தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு.. எலி மருந்து விவகாரம்..இன்றைய டாப் 10 நியூஸ்!

Divya Sekar HT Tamil
Nov 16, 2024 01:35 PM IST

தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு, எலி மருந்து விவகாரம் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

Top 10 News : தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு.. எலி மருந்து விவகாரம்.. இன்றைய டாப் 10 நியூஸ்
Top 10 News : தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? சிறுமி வன்கொடுமை வழக்கு.. எலி மருந்து விவகாரம்.. இன்றைய டாப் 10 நியூஸ்

திரைப்பட தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!

தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர். அவர் மீது புகார்களும் குவிந்துள்ளது. கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினர். ஆனால் அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் தனிப்படை போலீசார் ஐதராபாத், ஆந்திராவில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

18 மணி நேர தரிசனம்

மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு. ஆன்லைன் மூலம் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேருக்கு அனுமதி. முன்பதிவு செய்துள்ளோர் ஆதார் கார்டு கொண்டுவர அறிவுறுத்தல்.

எலி மருந்து விவகாரம் - நிறுவனத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

வீட்டில் எலி மருந்து வைத்ததில் இருந்து கிளம்பிய நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரழந்த சம்பவம் தொடர்பாக, தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண் துறை அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சரிவில் தங்கம் விலை

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,945 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 55,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,16) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறுமி வன்கொடுமை வழக்கு; 67 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, 67 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராபர்ட் ப்ரூஸ் தரப்பு விளக்கமளிக்க உத்தரவு!

காங்கிரஸ் வேட்பாளரின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலப்பாளையத்தில் திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலப்பாளையத்தில் திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீசல் மீதான வரி விதிப்பை கைவிட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வழிகாட்டி மதிப்பு, பதிவுக் கட்டணம், வாகன வரி, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரியை எதிர்க்கும் தி.மு.க., மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று கோருகின்ற தி.மு.க., தற்போது தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்? என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான சாரல் விழக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.