தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Actor Rajinikanth Met And Talked To Sasikala, Who Is Settled In Poes Garden

Sasikala Rajinikanth Meet: ’சசிகலா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்!' இதுதான் விஷமாம்!

Kathiravan V HT Tamil
Feb 24, 2024 09:53 PM IST

“இந்த வீடு அம்மாவுக்கு எல்லா பேரு, புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்”

சசிகலா - ரஜினி சந்திப்பு
சசிகலா - ரஜினி சந்திப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார்.

ஜெயலலிதா உடன் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனில் இருந்த வேதா நிலையம் இல்லத்தில் சசிகலா இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அது அரசுக்கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது.

இதனால் போயஸ் கார்டன் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

சிறைவிடுதலைக்கு பிறகு நேரடி அரசியலில் சசிகலா உடனடியாக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார்.

பின்னர் 2021ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்தார்.

இதனை அடுத்து கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று போயஸ் கார்டனில் கட்டிய புதிய வீட்டில் சசிகலா குடியேறினார். 

இந்த நிலையில், புதியதாக கட்டி உள்ள சசிகலா வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், கிரகபிரவேசத்திற்காக வந்தேன். இந்த வீடு அம்மாவுக்கு எல்லா பேரு, புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அரசியல் பற்றி பேசவிரும்பவில்லை என ரஜினிகாந்த் கூறினார். 

IPL_Entry_Point