தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Women Police: காஞ்சிபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

Women Police: காஞ்சிபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

Marimuthu M HT Tamil
Jun 17, 2024 05:00 PM IST

Women Police: காஞ்சிபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Women Police: காஞ்சிபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு
Women Police: காஞ்சிபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

Women Police: காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் சாலையில் வைத்து, பெண் காவலர் டெல்லி ராணிக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது.

பணிமுடிந்து வீடு திரும்பிய காவலர் டெல்லி ராணியை வழிமறித்து அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது. அரிவாள் வெட்டால் பெண் காவலர் டெல்லி ராணி ரத்த வெள்ளத்தில் செய்வதறியாது கீழே சரிந்துள்ளார். அருகே இருந்தவர்கள் காவலர் டெல்லி ராணியை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடலில் கை, கால்கள் உள்ளிட்ட அனைத்துப் பாகங்களிலும் டெல்லி ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடால் கணவரைப் பிரிந்து, காவலர் டெல்லி ராணி வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிந்து வாழும் கணவர் கோபத்தில் டெல்லி ராணியை வெட்டியிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த காவலர் டெல்லி ராணி?:

காஞ்சிபுரம் அடுத்து இருக்கக் கூடிய சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர், டெல்லி ராணி. இவரது கணவர் பெயர் மேகநாதன். இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

காஞ்சிபுரத்திற்கு அடுத்து இருக்கக் கூடிய, விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் பெண் காவலராக டெல்லி ராணி இருந்து வருகிறார். இவர் இன்று பிற்பகல் பணிமுடிந்து தனது வீட்டுக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருக்கும்போது, காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கி வாயிலில், அவரைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர், காவலர் டெல்லி ராணியை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. வெட்டியது அவரது கணவர் மேகநாதன் எனவும் கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் படுகாயம் அடைந்த நிலையில் கணவர் மேகநாதன் என சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த பொதுமக்கள் நினைவிழந்த டெல்லி ராணியை மீட்டு, அருகில் இருந்த காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர்.

பெண் காவலர் டெல்லி ராணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியம்:

அதைத்தொடர்ந்து டெல்லி ராணி அவசர தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது கை மற்றும் காலில் பலத்த அரிவாள் வெட்டுக்காயம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் படுகாயங்களுடன் இருந்த டெல்லி ராணிக்கு, தீவிர சிகிச்சையானது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

சீருடையில் இருக்கும்போது காவலர் வெட்டப்பட்டதால், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவ்விடம் வருகை தந்து, இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

மேலும், டெல்லி ராணி தரப்பிலும் வெட்டியது அவரது கணவர் தான் என்று சொல்லப்படுவதால், அவரைப் பிடித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.

கணவர் மேகநாதனும், மனைவி டெல்லி ராணியும் கருத்து வேறுபாடு அடைந்து, இருவரும் கடந்த ஆறுமாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், விவாகரத்தும் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக பாலுசெட்டி காவல்நிலையத்திலும் ஒரு வாரத்திற்கு முன்பு மேகநாதன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மேகநாதன் மீது காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர்.பதிவு மட்டும் செய்துவிட்டு, இருதரப்புக்கும் இடையே சமரசமும் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், ஒருவாரத்திற்குள் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.