தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Crime: Police Negligence.. Journalist Slashed With Sickle.. Chennai Journalists' Forum Strongly Condemns

Crime: போலீசார் அலட்சியம்.. செய்தியாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2024 06:30 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தி போன்றவற்றை நேசபிரபு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் நேச பிரபு
தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் நேச பிரபு

ட்ரெண்டிங் செய்திகள்

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பயங்கர வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கைகள் மற்றும் நெஞ்சுப்பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் இதையடுத்து போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் உரிய எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர் தாக்குதலை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை 24-01-2023 புதன்கிழமை இரவு , அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தி போன்றவற்றை நேசபிரபு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்த செய்தியாளர் நேசபிரபு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்