தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thoothukudi: தேசிய நெடுஞ்சாலையில் 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் படுகாயம்

Thoothukudi: தேசிய நெடுஞ்சாலையில் 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் படுகாயம்

Jun 17, 2024 12:38 PM IST Karthikeyan S
Jun 17, 2024 12:38 PM IST
  •  தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 வேன்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பக்தர்கள், சமையல் ஊழியர்கள் என 28 பேர் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர்கள் 15 பேர் விளாத்திகுளத்தில் இரவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக வேனில் சென்றனர். அவர்கள் சென்ற வேனஅ எட்டயாபுரம் புறவழிச்சாலையில் இருந்து விளாத்திகுளம் செல்லும் விலக்கில் திரும்பியபோது, எதிர்திசையில் இருக்கன்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பக்தர்கள் வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
More