தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wpl Auction 2023: மகளிர் ஐபிஎல் ஏலம் விடுபவரும் பெண்! கவனம் ஈர்க்கும் பிளேயர்ஸ்

WPL Auction 2023: மகளிர் ஐபிஎல் ஏலம் விடுபவரும் பெண்! கவனம் ஈர்க்கும் பிளேயர்ஸ்

Manigandan K T HT Tamil
Feb 13, 2023 08:23 AM IST

WPL Auction 2023: இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்பட 24 வீராங்கனைகளின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏலம் விடப்போகும் மல்லிகா சாகர்
ஏலம் விடப்போகும் மல்லிகா சாகர் (Pundole’s/Facebook)

ட்ரெண்டிங் செய்திகள்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 அணிகளுக்காக 90 வீராங்கனைகள் ஏலத்தில் வாங்கப்படவுள்ளன.

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட்டைப் போல இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலம் விடப்படவுள்ளனர்.

அகமதாபாத், மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்பட 24 வீராங்கனைகளின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா வீராங்கனை மரிஜானே காப், ஷப்னிம் இஸ்மாயில், இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி உள்ளிட்டோரின் தொடக்க விலை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, யு-19 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்த ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் ஐபிஎல் மார்ச் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள்.

இதற்காகதான் இன்று ஏலம் நடக்கிறது. இந்த ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

மொத்தம் 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அவர்களில் 269 பேர் இந்தியர்கள், 179 பேர் வெளிநாட்டவர்.

அவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற்றவர்கள் ஆவர். இந்தியாவின் லத்திகா குமாரி (41 வயது) அதிக வயதுடைய வீராங்கனையாகவும், ஷப்னம், சோனம் யாதவ், வினி சுசான் மூவறும் குறைந்த வயது (15 வயது) வீராங்கனைகளாகவும் அறியப்படுகிறார்கள்.

இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புண்டு. ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் டாப் ஸ்கோரரான பெத் மூனி, மெக் லான்னிங், எல்லிஸ் பெர்ரி, அலிசா ஹீலி, அஷ்லீ கார்ட்னர் ஆகியோரும் ஏலத்தில் கவனம் பெறும் வெளிநாட்டு வீராங்கனைகளாக திகழ்கிறார்கள்.

ஏலத்தை விடுபவரும் பெண்

ஏலம் விடுபவரும் ஒரு பெண் தான். அவர் பெயர் மல்லிகா சாகர். மும்பையில் கலை பொருட்களை ஏலத்தில் விட்ட அனுபவம் கொண்ட மல்லிகா சாகர், முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏல நிகழ்ச்சியின் முகமாக இருந்து நடத்தவுள்ளார். 2021இல் ப்ரோ கபடி லீக் ஏலத்தை இவர் நடத்தியுள்ளார்.

இந்த ஏல நிகழ்வை ஸ்போர்ட்18 சேனல் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்