தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Italian Open Tennis: 135-வது நிலை வீரரிடம் தோல்வி அடைந்த முன்னணி டென்னிஸ் வீரர்!

Italian Open Tennis: 135-வது நிலை வீரரிடம் தோல்வி அடைந்த முன்னணி டென்னிஸ் வீரர்!

Manigandan K T HT Tamil
May 16, 2023 12:09 PM IST

Carlos Alcaraz: 20 வயது ஆகும் அல்காரஸ் கடந்த ஆண்டு யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸாலமை வென்று அசத்தினார்.

தோல்வி அதிர்ச்சியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ்
தோல்வி அதிர்ச்சியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் 3-6, 6-7 (4-7) என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரி வீரர் பாபியன் மாரோஸ்சனிடம் தோல்வி அடைந்தார்.

இதன்மூலம், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்று இருந்த அல்காரஸின் வெற்றி நடை முடிவுக்கு வந்திருக்கிறது.

இன்னும் 2 வாரங்களில் புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் அல்காரஸ் பங்கேற்கிறார். 20 வயது ஆகும் அல்காரஸ் கடந்த ஆண்டு யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸாலமை வென்று அசத்தினார்.

பார்சிலோனா, மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்த அல்காரஸ் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறார்.

தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள முன்னணி வீரர் ஒருவர், 135வது இடத்தில் உள்ள வீரரிடம் தோல்வி கண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போட்டி தரவரிசையில் இத்தாலியன் ஓபனில் 2வது இடத்தில் இருந்தார் அல்காரஸ். எதிர்வரும் பிரெஞ்சு ஓபனில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் அல்காரஸ்.

களிமண் மைதானத்தில் விளையாட வேண்டும் என்பதால் பிரெஞ்சு ஓபனுக்கு நீண்ட காலமாகவே அல்காரஸ் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தோல்விக்கு பிறகு அல்காரஸ் கூறுகையில், "நான் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கப் போகிறேன். எனது மனதுக்கு ஓய்வு தேவை. நான் நல்ல நிலையில் பிரெஞ்சு ஓபனில் விளையாட வேண்டும் என்றால் நான் நன்கு பயிற்சி செய்ய வேண்டும். நான் தொடர்ச்சியாக 3 முதல் 4 நாட்கள் அப்போட்டியில் பங்கேற்பதற்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபடுவேன். இத்தாலி ஓபனில் ஹங்கேரிய வீரருக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர் டாப் 100 லிஸ்ட்டில் விரைவில் முன்னேறி வருவார். அவர் சிறந்த வீரர்" என்றார் அல்காரஸ்.

இன்றைய தினம் சிறப்பாக இருந்தது. நான் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை என்றார் ஹங்கேரி வீரர் பாபியன்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்