Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Manigandan K T HT Tamil
May 19, 2024 02:13 PM IST

Satwik-Chirag:தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன் (Photo by Lillian SUWANRUMPHA / AFP)
Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன் (Photo by Lillian SUWANRUMPHA / AFP) (AFP)

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், இந்திய பேட்மிண்டன் வீரர்களான சிராக் மற்றும் சாத்விக்சாய்ராஜ் ஜோடி பதக்கம் வெல்லும் ஆர்வத்தில் பெரும் ஊக்கத்தை அளித்தது. சீனாவின் சென் போ யாங், லியு யீ ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சூப்பர் வெற்றி

உலகின் மூன்றாம் நிலையில் உள்ள வீரர்கள் சென் மற்றும் யீ ஆகியோரை 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒன்பதாவது பி.டபிள்யூ.எஃப் உலக டூர் பட்டத்தை வென்றது சாத்விக் ஜோடி. மார்ச் மாதம் பிரெஞ்சு ஓபனை வென்ற பிறகு அவர்கள் இந்த ஆண்டில் வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும்.

முதல் நிலை ஜோடி ஆரம்பத்தில் 5-1 என்ற கணக்கில் முசூப்பன்னிலை பெற்றது, ஆனால் சென் மற்றும் யீ மீண்டும் வந்து 7-7 என சமன் செய்தனர். இதையடுத்து சாத்விக், சிராக் ஜோடி 10–7 என பின்தங்கியது.

தீவிரமான போட்டி தொடர்ந்தன, ஆனால் இந்த முறை இந்திய ஜோடி பெரும்பாலும் அதிரடியைக் காட்டியது. சிராக் ஒரு பரபரப்பான ஸ்ட்ரோக்கை எடுத்து ஆட்டத்தை 10-10 என சமன் செய்தார்.

இதையடுத்து இந்திய ஜோடி 14-11 என முன்னிலை பெற்றது. முதல் செட்டை சாத்விக், சிராக் ஜோடி 21–15 என கைப்பற்றியது.

அனல் பறந்த இரண்டாவது செட்

2-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 8-3 என முன்னிலை பெற்றது. ஐந்து புள்ளிகள் முன்னிலை சிறிது நேரம் இருந்தது, ஆனால் சென் மற்றும் யி தொடர்ந்து மூன்று புள்ளிகளுடன் போராடினர். முதல் செட்டை சிராக், சாத்விக் ஜோடி 15–11 என முன்னிலை வகித்தது. சிராக் மற்றும் சாத்விக் ஆகியோர் ஓரிரு எரர் செய்ததைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டை இழந்தனர், இது அவர்களின் எதிரணியை பற்றாக்குறையை ஒரு புள்ளியாக குறைக்க அனுமதித்தது.

இந்திய ஜோடி அதிரடியாக விளையாடி பின்னர் முன்னிலை பெற்றது. முதல் செட்டை போலவே இரண்டாவது செட்டையும் சாத்விக் ஜோடி 21–15 என கைப்பற்றியது.

சாத்விக் ஜோடி பேட்டி

"தாய்லாந்து ஓபன் எங்களுக்கு ஒரு சிறப்புப் போட்டியாக இருந்தது, ஏனெனில் நாங்கள் இங்கு எங்கள் முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்றோம், அதன் பிறகு மேலும் பல போட்டிகளை வென்றுள்ளோம். இந்த வெற்றி எங்களுக்கு மற்றொரு வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சாத்விக் கூறினார். இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் குறித்து பேசிய சாத்விக், அவர்கள் தங்கள் சீன எதிரிகளுக்கு எதிராக தங்கள் சிறந்த விளையாட்டை விளையாடினர் என்றார்.

"எங்கள் எதிரிகளுக்கு எதிராக சிறப்பாக விளையட முடியும் என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் அவர்கள் கடைசி வரை போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் இன்று போட்டியின் சிறந்த ஆட்டத்தை விளையாடி நிலைமையை நன்றாக கட்டுப்படுத்தினோம்" என்று அவர் மேலும் கூறினார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஜோடியை பேட்மின்டன் உலகம் பாராட்டி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.