தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 17, 2024 05:27 PM IST

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனையாக இந்தியாவுக்காக விளையாடிய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா தற்காலிகமாக 18 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா
பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த தகவல் முற்றிலும் தங்களை நொறுக்கிவிட்டதாக ஹூடாவின் பயிற்சியாளர் சுதிர் ஹூடா தெரிவித்துள்ளார்.

இருப்பிட புதுப்பிப்பு தோல்வி

கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை ஒரு வருடத்துத்துக்குள் மூன்று இருப்பிட தோல்விகளை பிரவீன் திரட்டியதாக அறியப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட சோதனைக் குளத்தின் (RTP) ஒரு பகுதியாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் காலாண்டுக்கு ஒருமுறை இருப்பிட புதுப்பிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாடா விதிகளின்படி, "12 மாத காலத்துக்குள் மூன்று இருப்பிட தோல்விகள் (தோல்வி மற்றும் / அல்லது தவறவிட்ட சோதனை) ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறலாகும். இதற்காக 2 ஆண்டுகள் வரை தகுதி நீக்கம் செய்யப்படலாம். தவறின் அளவைப் பொறுத்து குறைந்தபட்சம் 1 வருடமாகக் குறைக்கப்படும்."

இந்த சூழ்நிலையில் பிரவீனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகுதி நீக்கம் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பை (பிஎஃப்ஐ) குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. "நாங்கள் ஐபிஏவுடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்தில் இருக்கிறோம். எங்கள் முக்கிய குறிக்கோள் குறைந்தபட்சம், இடைநீக்கத்தை ஒரு வருடமாகக் குறைக்க வேண்டும்" என்று பர்வீனின் வழக்கை எடுத்துக் கொண்ட வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்ததடை முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதற்கு சாத்தியம் இல்லை எனவும், சஸ்பென்ஷனை குறைக்க முடிந்தாலும், பர்வீன் மற்றும் இந்தியா 57 கிலோ எடை பிரிவுக்கான இடத்தை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பர்வீன் பயிற்சியாளர் கூறியதாவது

"பி.எஃப்.ஐ மற்றும் அப்போதைய தலைமை பயிற்சியாளர் (பெர்னார்ட் டன்னே) ஆகியோருக்கு ப்ரவீன் மீண்டும் மீண்டும் நினைவூட்டல்களை அனுப்பினார். ஆனால் அனைவரும் மின்னஞ்சல்களை புறக்கணித்தனர். பர்வீன் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். தற்போது அதற்கான விலையை கொடுத்துள்ளார்" என்றார்

இந்த விவகாரத்தில், "ஓரிரு நாட்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும், ஆனால் சிறந்ததைச் செய்ய சாத்தியமான அனைத்து சேனல்களுடனும் நாங்கள் தொடர்பு கொள்கிறோம்" என்று பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் ஹேமந்தா கலிதா கூறினார்.

பர்வீனின் பெயர் ஆரம்பத்தில் கஜகஸ்தானில் நடந்து வரும் எலோர்டா கோப்பைக்கான அணி பட்டியலில் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து, பி.எஃப்.ஐ அதிகாரப்பூர்வமாக அணியை அறிவித்தபோது, பெண்கள் 57 கிலோ பிரிவில் எந்த குத்துச்சண்டை வீரரும் இல்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் தற்போது ரோஹ்தக்கின் ருர்கி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார்.

பர்வீன் ஹூடா இடத்தில் ஜெய்ஸ்மின் லம்போரியா

பர்வீன் இல்லாத நிலையில், மே 24 முதல் ஜூன் 2 வரை பாங்காக்கில் திட்டமிடப்பட்டுள்ள உலக ஒலிம்பிக் தகுதி போட்டிக்குத் தயாராகுமாறு 60 கிலோ குத்துச்சண்டை வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியாவை பிஎஃப்ஐ கேட்டுக் கொண்டுள்ளது.

"பாங்காக்குக்கு தயாராகுமாறு சில பயிற்சியாளர்கள் எங்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெய்ஸ்மின் ஏற்கனவே தனது எடையைக் குறைத்து, ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை வெல்ல ஒரு நாளைக்கு இரண்டு முறை பயிற்சி செய்கிறார்" என்று அவரது பயிற்சியாளரும் மாமாவுமான சந்தீப் லம்போரியா கூறியுள்ளார்.

பர்வீன் தவிர, நிகாத் ஜரீன் (50 கிலோ), ப்ரீத்தி (54 கிலோ), டோக்கியோ வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ) ஆகியோர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டில் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்