Congress manifesto: 'காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தாய்லாந்து புகைப்படங்கள் இருக்கு': ராகுல் மீது பாஜக கடும் விமர்சனம்
Congress manifesto: 2024 தேர்தலில் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டம், அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு, ஊதிய சமநிலை, உயர் பதவிகளில் அதிகரித்த பிரதிநிதித்துவம் மற்றும் குடும்ப வன்முறை போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவை காங்கிரஸ் வாக்குறுதிகளில் அடங்கும்.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி(Twitter Photo)
‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நியூயார்க் மற்றும் ராகுல் காந்தியின் விருப்பமான இடமான தாய்லாந்தின் படங்கள் இடம்பெற்றுள்ளன’ என பாஜக விமர்சித்துள்ளது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், "சுற்றுச்சூழல் பிரிவின் கீழ் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபல்லோ நதியின் படம் காங்கிரஸ் நியாய் பத்ராவில் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீர் மேலாண்மை குறித்து படம் உள்ளது. இந்த படம் நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ நதியின் படம். சுற்றுச்சூழல் பிரிவின் கீழ், ராகுல் காந்தி விரும்பிய இடமான தாய்லாந்தில் இருந்து ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் யார் தேர்தல் அறிக்கையில் போடுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
