தமிழ் செய்திகள்  /  Sports  /   Sunil Gavaskar, Ravi Shastri Reunite With 1983 World Cup Stars After India Retain Bgt

கேப்டன் வீட்டில் ஒன்று கூடிய 1983 உலகக் கோப்பை வீரர்கள்...ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 21, 2023 11:51 AM IST

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்து வரும் ரவி சாஸ்த்ரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் டெல்லியில் உள்ள கபில்தேவ் வீட்டுக்கு சென்று நேரத்தை செலவிட்டுள்ளனார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் மூன்று நாளிலேயே முடிவுற்ற நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கபில் தேவ் வீட்டில் ஜாலி அரட்டையில் 1983 உலகக் கோப்பை அணி வீரர்கள்
கபில் தேவ் வீட்டில் ஜாலி அரட்டையில் 1983 உலகக் கோப்பை அணி வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

"83 உலகக் கோப்பை அணி கேப்டன் கபில் தேவ் வீட்டில் இந்த அற்புதமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பான டின்னர், உரையாடல்கள் மூலம் கொண்டாடப்பட்டது. சிறப்பான மாலை பொழுதாக அமைந்தது." என்று இந்த சந்திப்பு குறித்து கவால்கர் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 183 ரன்கள் என மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்திருந்தபோதிலும், ஜாம்பவான் வீரர்களுடன், பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.

அந்த உலகக் கோப்பை வெற்றியானது முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லாமல், வேறொரு அணி பெற்ற முதல் வெற்றியாக அமைந்தது.

அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணி தேர்வுக்குழு தலைவாராக இருந்தார். அவர் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட அணிதான் மீண்டும் 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்றது. ரவி சாஸ்த்ரி இந்திய அணி பயிற்சியாளராகவும், புகழ் பெற்ற வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். கவாஸ்கர் வர்ணனையாளராக இருக்கிறார்.

அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்வும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இதே போல் மோனிந்தர் அமர்நாத், மதன்லால், சையத் கிர்மானி உள்ளிட்டோரும் பிசிசிஐ முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்