தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: ‘ஆமா.. இது அதுல்ல..’ ரோஹித் சர்மா போட்ட 3 வார்த்தை ட்விட்!

Rohit Sharma: ‘ஆமா.. இது அதுல்ல..’ ரோஹித் சர்மா போட்ட 3 வார்த்தை ட்விட்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 25, 2023 11:42 AM IST

இந்த வெற்றி சாத்தியமாயிருந்தால், 2-0 என்று மேற்கு இந்திய தீவுகள் அணியை க்ளீன் ஸ்விப் செய்திருக்கும் இந்தியா.

டிட்ரினிடாட் டெஸ்ட் போட்டியில் கொட்டும் மழையை பார்க்கும் கேப்டன் ரோஹித் சர்மா
டிட்ரினிடாட் டெஸ்ட் போட்டியில் கொட்டும் மழையை பார்க்கும் கேப்டன் ரோஹித் சர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வெற்றி சாத்தியமாயிருந்தால், 2-0 என்று மேற்கு இந்திய தீவுகள் அணியை க்ளீன் ஸ்விப் செய்திருக்கும் இந்தியா. இது இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் அதிலும், இந்திய கேட்பன் ரோஹித் சர்மாவுக்கு பயங்கர வருத்தம்.

ஒரு பந்து கூட வீசப்படாமல் 5வது நாள் முழுவதும் மழை பெய்ததால், மேற்கிந்தியத் தீவுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், இந்திய கேப்டன் ரோஹிட் சர்மார், 2-0 என்று வெற்றி பெற முடியாமல் போனதே என்கிற விரக்தியில், அதற்கு காரணமான மழை குறித்து இன்று காலை ஒரு ட்விட் போட்டுள்ளார்.

அந்த ட்விட்டரில், ‘‘மும்பை யா டிரினிடாட்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது சொந்த ஊரான மும்பையில் கனமழை காரணமாக பல்வேறு சிரமங்களை அங்குள்ள மக்கள் சந்தித்து வருகின்றனர். அந்த மோசமான வானிலயை சந்திக்காமல் பாதுகாப்பாக வெஸ்ட் இண்டிஸ் பயணத்தில் இருந்தார் ரோஹித்.

அதே மழை, தன்னுடைய முழுமையான வெற்றிக்கு வேட்டு வைத்த நிலையில், தான் விளையாடி டிரனிடாட் நகரமும் மும்பை மாதிரி ஆகிவிட்டதாக ரோஹித் சர்மா ட்விட் செய்துள்ளார்.

நேற்றைய போட்டியின் சுருக்கம்:

இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நாளில் 289 ரன்கள் தேவை என்ற நிலை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

இதனால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்து முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் தொடர் நாயகன் விருது சர்ப்ரைசாக யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த லிஸ்டில் 15 விக்கெட்டுகள் மற்றும் 56 ரன்கள் எடுத்து அஸ்வின், 266 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வில் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருந்தனர். இருந்தபோதிலும் கடைசி நாள் ஆட்டம் முழுமையாக நடைபெறாத நிலையில் தொடர் நாயகன் விருது யாருக்கும் அளிக்கப்படவில்லை.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்