தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Odi Record: ஷாகிப்பின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

ODI Record: ஷாகிப்பின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

Manigandan K T HT Tamil
Mar 21, 2023 10:38 AM IST

Mushfiqur Rahim: வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் 60 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்
வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

சைல்ஹெட் நகரில் கடந்த 18ஆம் தேதி நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேசம் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

இதையடுத்து நேற்று 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக முடிவு வெளியாகவில்லை.

எனினும், டாஸ் வென்ற அயர்லாந்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.

கேப்டன் தமிம் இக்பால் 23 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், அதிரடி ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் அரை சதம் விளாசினர்.

விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் 60 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

இதற்கு முன்பு வங்கதேச பிளேயர் ஷாகிப் அல் ஹசன் ஜிம்பாப்வேக்கு எதிராக 63 பந்துகளில் 100 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அந்தச் சாதனையை தற்போது முஷ்பிகுர் ரஹிம் முறியடித்துள்ளார். 2009இல் ஷாகிப் செய்த சாதனையை 14ஆண்டுகளுக்கு பிறகு இவர் முறியடித்துள்ளார்.

வங்கதேச வீரர் odi-ல் அடித்த அதிவேக சதம் இதுதான். அத்துடன் 7,000 odi ரன்களையும் இவர் பதிவு செய்துள்ளார்.

இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் தமிம் இக்பால், ஷாகிப் ஆகியோருக்கு பிறகு 7ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஒரு நாள் போட்டியில் 349 ரன்கள் எடுத்ததும் இதுவே முதல்முறையாகும்.

மழை குறுக்கிட்டதால் அயர்லாந்தால் விளையாட முடியவில்லை. இதனால், ரிசல்ட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்