தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: ஆஸ்திரேலியா வீரர்களிடம் வாக்குவாதம் - மூன்று பேருக்கு இடைக்கால தடை விதிப்பு

Ashes 2023: ஆஸ்திரேலியா வீரர்களிடம் வாக்குவாதம் - மூன்று பேருக்கு இடைக்கால தடை விதிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2023 09:30 AM IST

லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது ஆட்டத்தின் நடுவே ஆஸ்திரேலியா வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவருக்கு இடைக்கால தடைவிதித்து மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.

ஆஸி., கிரிக்கெட்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று பேருக்கு இடைக்கால தடை
ஆஸி., கிரிக்கெட்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று பேருக்கு இடைக்கால தடை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்தார். அவர் களத்தில் இருந்த வரை இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துர்தஷ்டசமாக அவர் அவுட்டான நிலையில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 327 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் ரன் அவுட் திருப்பு முனையாக அமைந்ததுடன், சர்ச்சையும் கிளப்பியுள்ளது. அவர் பந்து வீசி கீப்பரிடம் சென்ற பிறகு, சிறிது விநாடிகள் கழித்து கிரீஸூக்கு வெளியே சென்ற பிறகு, ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உடனடியாக ஸ்டம்பில் அடித்து அவுட் அப்பீல் செய்தார். இது மூன்றாவது நடுவரிடமும் அப்பீல் செல்ல அவர் அவுட் கொடுத்தார். இந்த விக்கெட்டும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விக்கெட்டுக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.

இதில், உச்சபட்சமாக போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதில் ஆஸ்திரேலியா ஓபனர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோரிடம் கடுமையாக பேச, உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.

இதனால் மைதானத்தில் சற்று சலசலப்பு உருவானது.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற பிறகும்கூட இங்கிலாந்து ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வாரியத்தை கேட்டு கொண்டது.

இதையடுத்து வாக்குவாதம் மற்றும் கோஷங்களை எழுப்பிய ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் மூன்று ரசிகர்களுக்கு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நுழைய இடைக்கால தடைவிதிப்பதாக எம்சிசி (மெரில்போன் கிரிக்கெட் கிளப்) அறிவித்துள்ளது.

ரசிகர்களின் இந்த செயலுக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கோருவதாகவும் எம்சிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்