தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Gt Result: பேட்டிங், பவுலிங்கில் கலக்கல்! சேப்பாக்கத்தில் 47வது வெற்றி - சிஎஸ்கேவுக்கு எதிராக அடிபணிந்த குஜராத்

CSK vs GT Result: பேட்டிங், பவுலிங்கில் கலக்கல்! சேப்பாக்கத்தில் 47வது வெற்றி - சிஎஸ்கேவுக்கு எதிராக அடிபணிந்த குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 26, 2024 11:35 PM IST

முதலில் பேட்டிங், அப்புறமா பவுலிங்கில் கலக்கிய சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 63 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

விருத்திமான சஹா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள்
விருத்திமான சஹா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 206 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே டாப் ஆர்டர் அதிரடியாக பேட் செய்த நிலையில் டூபே 51 , ரச்சின் ரவீந்திரா 46, ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் பவுலர்கள் ரஷித் கான் 2, சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சிஎஸ்கே வெற்றி

இதைத்தொடர்ந்து 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37, மில்லர் 21, விருத்திமன் சாஹா 21 ரன்கள் எடுத்தனர். சிஎஸ்கே பவுலர்களில் தீபக் சஹார், துஷார் தேஸ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

முதல் போட்டியில் 4, இந்த போட்டியில் 2 என தற்போது வரை 6 விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான், அதிக விக்கெட்டுகளை எடுக்கும் பவுலருக்கு கொடுக்கப்படும் பர்பிள் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டேரில் மிட்செல் பவுலிங்

சர்ப்ரைசாக ஆட்டத்தின் 7வது ஓவர் சிஎஸ்கே பேட்டிங் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலுக்கு பவுலிங் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 3வது பந்தில் சிறப்பாக பேட் செய்து வந்த விஜய் சங்கரை அவுட்டாக்கினார். 12 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் அடித்த பந்து அவுட்சைடு எட்ஜ் ஆக, தோனி அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

சாய் சுதர்சன் - மில்லர் பார்ட்னர்ஷிப்

குஜராத் அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியபோது விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக களத்தில் இருந்த சாய் சுதர்சனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார் புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கிய டேவிட் மில்லர். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்த இவர் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் மில்லர் அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார் அஜிங்கியா ரஹானே. சாய் சுதர்சன் - மில்லர் இணைந்து மிடில் ஓவர்களில் 41 ரன்கள் சேர்ததனர்.

சாய் சுதர்சன் அவுட்

விக்கெட் சரிவை தடுத்து சிறப்பாக பேட் செய்து வந்த சாய் சுதர்சன் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து வந்த நிலையில், தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்ததால் அதிரடியாக ஆட முயற்சித்து அவுட்டானார். சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.

சிஎஸ்கே பவுலர்கள் அசத்தல்

இந்த போட்டியில் சிஎஸ்கே பவுலர்களில் ஸ்பின்னரான ரவீந்தர ஜடேஜா 2 ஓவர்கள் மட்டும் வீசினார். மற்ற ஓவர்கள் அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்களே வீசினர். இதில் அனைவரும் விக்கெட்டுகளை எடுத்தனர். ரன்களை வாரி வழங்கும் பவுலராக இருந்து வந்து தேஷ்பாண்டே 4 ஓவரில் வெறும் 31 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point