தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rakul Preet Singh Reveals How Her Dad Grilled Jackky Bhagnani In First Meeting

Rakul Preet Singh: வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை.. கணருக்கு அப்பா வைத்த முதல் டெஸ்ட்! - கதி கலங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 12, 2024 04:11 PM IST

அதற்கு ஜாக்கி… தன்னுடைய அடுத்தப்பட வெளியீடு குறித்தான வேலைகள் குறித்து பேசினார். அதற்கு என்னுடைய அப்பா, வேலை உள்ளிட்டவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ரகுலை பொறுத்தவரை உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார்.

Rakul Preet Singh with her father and Jackky Bhagnani at her wedding festivities in February 2024.
Rakul Preet Singh with her father and Jackky Bhagnani at her wedding festivities in February 2024.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவர்கள், கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் டி.என்.ஏ தளத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த பேட்டியில், ஜாக்கி தன்னுடைய அப்பாவை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “  உண்மையில் அன்று நான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையை ஜாக்கி உடனான அந்த சந்திப்பிற்கு தயார்படுத்தி, அவர் முதன்முறையாக உங்களை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பை அசெளரியமாக மாற்றி விடாதீர்கள். ஜாக்கி ராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல.ஆகையால் நீங்கள் பையனை பார்த்தால் மட்டும் போதும் என்று கூறியிருந்தேன். ( ரகுல் ப்ரீத் சிங் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர்)

ஜாக்கியிடமும் நீ எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். அப்பா எதையும் உன்னிடம் கேட்கமாட்டார் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அப்பாக்கள் அப்பாக்களாத்தானே நடந்து கொள்வார்கள். ஜாக்கியிடம் அவர் நேரடியாக சில விஷயங்களை கேட்டார். ஆனால் ஜாக்கி அதற்கு தயாராக இருந்தார். என்னுடைய அம்மாவின் பிறந்தநாளிற்கு அவர் டெல்லி வந்திருந்தார்.

நாங்கள் மதிய உணவை ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அப்பா ஜாக்கியிடம்அடுத்ததாக உங்களது திட்டம் என்ன என்று கேட்டார். 

அதற்கு ஜாக்கி… தன்னுடைய அடுத்தப்பட வெளியீடு குறித்தான வேலைகள் குறித்து பேசினார். அதற்கு என்னுடைய அப்பா, வேலை உள்ளிட்டவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ரகுலை பொறுத்தவரை உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார். 

இதைப்பார்த்த எனக்கு, சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு  என்னுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது. ஆனால் அதற்கு ஜாக்கி கொடுத்த பதிலானது என்னுடைய அப்பாவை அவரின் ரசிகராக மாற்றிவிட்டது. ஆம் ஜாக்கி… ரகுல் எப்போது ரெடியாக இருக்கிறாளோ… அப்போது நானும் ரெடியாக இருப்பேன்’ என்றார்.

முன்னதாக, ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய அப்பா 500 ரூபாய் நோட்டை எரிக்கச் சொன்ன அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 

அந்த பேட்டியில், “அது ஒரு மறக்க முடியாத தீபாவளி. என் தந்தை என்னிடம் ரூ. 500 நோட்டைக் கொடுத்து எரிக்கச் சொன்னார். நான் அதிர்ச்சியடைந்து, ஏன் இப்படிச் செய்யச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அவர் என்னிடம், நீங்கள் அதைத் தான் செய்கிறீர்கள். பட்டாசுகளை வாங்கி வெடிக்கிறீர்கள். பணத்தைப் பயன்படுத்தி சில இனிப்புகளை வாங்கி, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்தால் என்ன ஆகும் என கேட்டார்.

நான் 9 அல்லது 10 வயது சிறுமியாக இருந்தேன். அவர் அதை என்னிடம் சொன்ன போது, ஸ்வீட்ஸ் கடைக்குச் சென்று, இனிப்புகளை வாங்கி, ஆதரவற்றவர்களுக்கு விநியோகித்தது எனக்கு நினைவிருக்கிறது.

அன்று நான் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்ந்தேன், அதன் பிறகு பட்டாசுகளை வெடிக்கவில்லை” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்