தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: Out Of Form ரோஹித் ஷர்மா நிகழ்த்திய மோசமான சாதனை

Rohit Sharma: Out of Form ரோஹித் ஷர்மா நிகழ்த்திய மோசமான சாதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 10, 2023 11:24 AM IST

உச்சகட்ட அவுட்ஆஃப் பார்மில் இருந்து வரும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா, தொடர்ச்சியாக 5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளார். இதில் இரண்டு முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

பேட்டிங்கில் மோசமான பார்மில் சிக்க தவிக்கும் ரோஹித் ஷர்மா
பேட்டிங்கில் மோசமான பார்மில் சிக்க தவிக்கும் ரோஹித் ஷர்மா (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 191 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரேயொரு முறை மட்டுமே அரைசதம் விளாசியுள்ளார். அத்துடன் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில், 2, 3, 0, 0, 7 ரன்கள் எடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக 2017 சீசனின்போது இதேபோல் 4 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினார் ரோஹித். இதைத்தொடர்ந்து தனது மோசமான சாதனையை தற்போது அவரே மீண்டும் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் 16 முறை டக்அவுட்டாகி இருக்கும் ரோஹித் ஷர்மா, அதிக முறை டக்அவுட்டான வீரர் என்ற லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் ஒரு அணியின் கேப்டனாக 10 முறை டக்அவுட்டாகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவுற்ற பின்னர் அடுத்த ஒரு வார இடைவெளியில் இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது முறையாக இந்தியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

இதை கருத்தில் கொண்டு ரோஹித் ஷர்மா உட்பட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் இடம்பெற்றிருக்கும் சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரருக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வில் இருந்து, மனரீதியாக புத்துணர்ச்சி பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் இந்திய அணிக்கு கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

மும்பை இந்தியனஸ் அணியில் ரோஹித் ஷர்மா சரியாக ஆடவில்லை என்றாலும், மற்ற பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ப்ளேஆஃப் வாய்ப்பை அந்த அணி நெருங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்