தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023: கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்சம் அபராதம்!

IPL 2023: கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்சம் அபராதம்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2023 01:14 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஊதியத்தில் இருந்து 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா
கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் சென்னையில் ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மெதுவாகப் பந்து வீசியதாக கூறி அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இம்பாக்ட் வீரர் ஓல்படம் கொல்கத்தா வீரர்கள் அனைவருக்கும் தலா 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் வந்து வீசி முடிக்க வேண்டும். அப்படி வந்து வீசவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். அதன் காரணமாகவே நேற்றைய போட்டியில் மெதுவாக ஓவர் வீதத்தை கடைப்பிடித்த காரணத்தினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இது போலவே மெதுவான ஓவர் வீதத்தை கடைப்பிடித்த காரணத்தினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்