தமிழ் செய்திகள்  /  Sports  /  Indvsnz 2nd Odi At Shaheed Veer Narayan Singh International Stadium In Raipur Will Host Its First International Game

INDvsNZ 2nd ODI: முதல் போட்டியை சந்திக்கும் ராய்பூர் மைதானம்: யாருக்கு சாதகம்?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 21, 2023 12:14 PM IST

Raipur ODI Match: கடந்த காலங்களில், இந்த மைதானத்தில் சில ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் ராய்பூர் மைதானம்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் ராய்பூர் மைதானம். (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, தொடரை யார் வெல்லப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியாகும். முதல் ஒரு நாள் போட்டியில் ஷுப்மான் கில்லின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

கில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார், மேலும் அந்த போட்டியில் இந்தியா மொத்தம் 349 ரன்கள் குவித்தது. 

நியூசிலாந்து அணியை பொருத்தவரை , கடந்த போட்டியில் இலக்கை அடைய கடினமாக போராடியது. மேலும் அணியின் பாதி பேர் 110 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.  மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் மட்டும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடினர். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணி 300 ரன்களைக் கடக்க உதவினார்கள். 

கடந்த போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து வெற்றியை தவறவிட்டது. இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டரில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மைதானம் யாருக்கு சாதகம்?

ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் முதல் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில், இந்த மைதானத்தில் சில ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. போட்டி முழுவதும் ஆடுகளம் சமநிலையில் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 256 ரன்கள் என்கிற சராசரியை எட்டும் என்று கூறப்படுகிறது. மைதானத்தின் சூழல், இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் தெரிகிறது. 

வானிலை நிலவரம் என்ன?

இன்றைய தினம் ராய்பூரில் வானம் தெளிவாக இருக்கிறது. போதிய வெப்பம் நிலவுவதால் மழை வருவதற்காகன வாய்ப்புகள் குறைவு. காலையில் பனி இருந்தாலும், பகல் இரவு ஆட்டம் என்பதால், இரவு இருக்கும் பனி, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பாதகமாக அமையலாம். 

இந்தியா அணியில் யார் யார்?

விராட் கோலி, ரோஹித் சர்மா( கேப்டன்), ஷுப்மான் கில், எஸ்.ஏ.யாதவ், எச்.எச்.பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன், கே.எல்.யாதவ், முகமது சிராஜ், எம்.ஷமி, ஷர்துல் தாக்கூர்

நியூசிலாந்து அணியில் யார்? யார்?

எச்எம் நிக்கோல்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டிஜே மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஹெச்பி ஷிப்லி, டாம் லாதம்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், எல்எச் பெர்குசன், பிஎம் டிக்னர்

WhatsApp channel

டாபிக்ஸ்