D Gukesh: சபாஷ் டி குகேஷ்.. செஸ் உலகில் புதிய சாதனை! விஸ்வநாதன் ஆனந்த் இடத்தை பிடித்து அசத்தல்!
Grandmaster D Gukesh: விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்த விருதை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த் 2014 இல் வெற்றி பெற்றார்.

உலக சாம்பியனுக்கான சவாலை தீர்மானிக்க நடைபெறும் போட்டியில் சாத்தியமான 14 புள்ளிகளில் ஒன்பது புள்ளிகளுடன் குகேஷ் 14 வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் எளிதாக டிரா செய்தார்
டொராண்டோ: டொராண்டோவில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக சாம்பியனுக்கான சவாலை தீர்மானிக்க நடைபெறும் போட்டியில் சாத்தியமான 14 புள்ளிகளில் ஒன்பது புள்ளிகளுடன் குகேஷ் 14 வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் எளிதாக டிரா செய்தார்.
சிறப்பான தரமான சம்பவம்!
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோத, குகேஷுக்கு உரிமை உண்டு.