Tamil News  /  Sports  /  Anand Mahindra To Gift An Electric Car To Praggnanandhaa Parents He Announced

Praggnanandhaa: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார்-ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

Manigandan K T HT Tamil
Aug 29, 2023 07:24 AM IST

Anand Mahindra: பிரபல தொழிலதிபரும், சமூக வலைத்தளங்களில் எப்போது படு ஆக்டிவாக இருப்பவருமான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

பெற்றோருடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா
பெற்றோருடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா

ட்ரெண்டிங் செய்திகள்

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இளம் சதுரங்க மேதை ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு கடும் போட்டி அளித்து வந்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா இறுதி போட்டி டைபிரேக்கரில் தோல்வியடைந்தார். உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.

பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தொழிலதிபரும், சமூக வலைத்தளங்களில் எப்போது படு ஆக்டிவாக இருப்பவருமான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சதுரங்கத்திற்கு அறிமுகப்படுத்தவும், அவர்கள் இந்த சிந்தனை விளையாட்டைத் தொடரும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஊக்குவிக்க விரும்புகிறேன் (வீடியோ கேம்களின் புகழ் அதிகரித்த போதிலும்!) எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே இதுவும் நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும்ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்