தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Indian Hockey Teams: 5 நாடுகளுடன் போட்டி-ஸ்பெயின் புறப்பட்ட இந்திய ஹாக்கி அணி

Indian Hockey Teams: 5 நாடுகளுடன் போட்டி-ஸ்பெயின் புறப்பட்ட இந்திய ஹாக்கி அணி

Manigandan K T HT Tamil
Dec 11, 2023 01:05 PM IST

இந்திய ஹாக்கி ஆடவர் மற்றும் மகளிர் அணி ஹாக்கி போட்டியில் விளையாடி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மகளிர் ஹாக்கி அணி
இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மகளிர் ஹாக்கி அணி (@TheHockeyIndia)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய மகளிர் ஹாக்கி அணி, போட்டியின் முதல் ஆட்டத்தில் டிசம்பர் 15-ம் தேதி போட்டியை நடத்தும் ஸ்பெயினுடன் மோதும், 16-ம் தேதி பெல்ஜியத்துடனும், டிசம்பர் 19-ம் தேதி ஜெர்மனியுடனும், 5 நாடுகள் போட்டியான வலென்சியாவின் கடைசி ஆட்டத்தில் டிசம்பர் 21 அன்று அயர்லாந்துடனும் மோதுகிறது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி, டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி பெல்ஜியத்தையும், டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியையும், டிசம்பர் 20ஆம் தேதி பிரான்ஸையும் எதிர்கொண்டு 5 நாடுகள் போட்டியான வலென்சியா 2023 பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

வலென்சியாவிற்கு விமானம் செல்வதற்கு முன், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறுகையில், "5 நாடுகள் போட்டியான வலென்சியா 2023, அடுத்த எஃப்ஐஎச் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்று ராஞ்சி 2024க்கு முன்னதாக, உலகின் சில சிறந்த ஹாக்கி அணிகளுக்கு எதிராக மோதும் வாய்ப்பாக கருதுகிறோம். இது எங்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். எங்கள் திறமைகளை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்." என்றார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 5 நாடுகள் போட்டியான வலென்சியா 2023 இன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார், “நாங்கள் தற்போது உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம், ஆனால் பாரிஸுக்கு முன்னதாக எங்கள் லட்சியங்களுக்கு ஏற்ப மேலும் மேலே ஏற முயற்சிப்போம். 2024 ஒலிம்பிக்ஸை மனதில் கொண்டுள்ளோம். வலென்சியாவுக்கு வரும் கடினமான அணிகளுக்கு எதிராக நமது திறமையைச் சோதித்து, நாங்கள் மேலே வருவதை உறுதிசெய்ய வேண்டும். இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும், மேலும் 5 நாடுகளின் போட்டியான வலென்சியா 2023 ஐத் தொடங்க குழு ஆர்வமாக உள்ளது.” என்றார்.

WhatsApp channel

டாபிக்ஸ்