தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus: நாடு திரும்பிய கேப்டன், 2 முக்கிய வீரர்கள் விலகல்! ஆஸி.க்கு சிக்கல்

Ind vs Aus: நாடு திரும்பிய கேப்டன், 2 முக்கிய வீரர்கள் விலகல்! ஆஸி.க்கு சிக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 21, 2023 01:27 PM IST

காயம் காரணமாக இரண்டு முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காயத்தால் அவதியுறும் ஆஸ்திரேலியா அணி
காயத்தால் அவதியுறும் ஆஸ்திரேலியா அணி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சூழ்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார்.

அவர் அடுத்த போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கம்மின்ஸ் அணிக்கு திரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியில் களமிறங்காத முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுதியுற்ற அவர், தற்போது புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக நாடு திரும்பியுள்ளார்.

இவரை தொடர்ந்து முழங்கையில் எலும்பு முறிய ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேனான டேவிட் வார்னரும் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட போட்டியில் பேட் செய்தபோது காயமடைந்தார் வார்னர். இதன்பின்னர் பீல்டிங் செய்தபோதும் காயமடைந்த அவர் மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மேட் ரென்ஷா விளையாடினார்.

இதைத்தொடர்ந்து வார்னர் தற்போது அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது மூன்று முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேவியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் தற்போது தேறியுள்ள நிலையில் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதேசமயம் காயத்தால் ஏற்கனவே விலகியிருந்த ஆஸ்திரேலியா பேட்டிங் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான கேமரூன் கிரீன் தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை களமிறக்கவும் ஆஸ்திரிலேயா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் இருப்பதால் ஆஸ்திரேலியா அணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் தீர்க்கப்படும் என தெரிகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்