தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Vs Kkr: கொல்கத்தாவுடான தோல்விக்கு இதுதான் காரணம்..மனம் திறந்து பேசிய தோனி!

CSK vs KKR: கொல்கத்தாவுடான தோல்விக்கு இதுதான் காரணம்..மனம் திறந்து பேசிய தோனி!

Karthikeyan S HT Tamil
May 15, 2023 10:46 AM IST

MS Dhoni: கொல்கத்தாவுடான போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தோனி
தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் டி20 61-வது லீக் மேட்ச் நேற்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 34 பந்துகளில் 48 ரன்களும், கான்வே 28 பந்துகளில் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 18.3 ஓவர்களில் 4 விக்கெடுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய், ரஹ்மனுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நிதானமாக விளையாடிய நிதிஷ் ராணா, ரின்கு சிங் ஜோடி கொல்காத்தாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இது அந்த அணிக்கு 6வது வெற்றியாகும்.

இந்த நிலையில், கொல்கத்தாவுடான போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. அப்போதுதான் பேட்டிங் செய்திருக்கக் கூடாது என உணர்ந்தேன். போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. அனைவரும் முடிந்தவரை முயற்சி செய்தனர். கள சூழல்தான் இந்த ஆட்டத்தில் எங்களுடைய வெற்றியை பாதிக்க வைத்து விட்டது. பேட்டிங்கில் கூடுதலாக 25 ரன்கள் எடுத்திருக்க இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவுடன் இந்த லீக் மேட்சில் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே உள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணியின் இடம் மாறவில்லை. இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்