தமிழ் செய்திகள்  /  Sports  /  All England Open 2024: Satwiksairaj-chirag Crash Out After Defeat In Second Round

All England Open 2024: 44 நிமிட போராட்டம் வீண் - வெளியேறிய சாத்விக் - சிராக் ஜோடி! அடுத்த சுற்றில் லக்‌ஷயா சென்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 01:56 PM IST

முதல் முறையாக ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரை கைப்பற்றுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாத்விக் - சிராக் ஜோடி இரண்டாவது சுற்றில் வெளியேறியுள்ளது. ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லக்‌ஷயா சென் (இடது), இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவிய சாத்விக் - சிராக்
அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லக்‌ஷயா சென் (இடது), இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவிய சாத்விக் - சிராக்

ட்ரெண்டிங் செய்திகள்

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென், மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா கேஸ்ட்ரோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி

இதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஆகியோர் இந்தோனேஷியாவின் ஜோடியான முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி மற்றும் பகாஸ் மௌலானா ஜோடியை எதிர்கொண்டது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று நல்ல பார்மில் இருந்து வந்த இந்தியா ஜோடி, இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது.

இந்தோனேஷியா ஜோடியின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் 16-21, 15-21 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவியது. சுமார் 44 நிமிடங்களை வரை இந்த போட்டி நடைபெற்றது.

ஆல் இங்கிலாந்து ஓபன் டைட்டிலை முதல் முறையாக இந்தியா ஜோடி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது சுற்றிலும் தோல்வியுடன் வெளியேறியுள்ளது.

இந்த ஜோடி தங்களது முதல் போட்டியில் 21-18, 21-14 என்ற நேர் செட்களில் இந்தோனஷியா ஜோடி முகமது அஹ்சன் மற்றும் ஹெந்திரா சேதிவான் ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் மற்றொரு இந்தோனேஷியா ஜோடிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.

லக்‌ஷயா சென்னுக்கு இரண்டாவது வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் டென்மார்க் நாட்டின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் என்பவரை எதிர்கொண்டார் இந்தியாவின் லக்‌ஷயா சென். பரபரப்பாக சென்ற இந்த போட்டி மூன்று செட்கள் வரை சென்றது.

முதல் செட்டில் 24-22 என தன்வசமாக்கிய லக்‌ஷயா சென், இரண்டாவது செட்டில் 11-21 என படுதோல்வியை சந்தித்தார். பின்னர் மூன்றாவது செட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்து 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

லக்‌ஷயா சென் தனது முதல் போட்டியில் டானிஷ் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் என்பவரை -14, 21-14 என நேர் செட்டில் வீழ்த்தினர். தற்போது இரண்டாவது போட்டியில் டென்மார்க் வீரருக்கு எதிராக மூன்று செட் வரை சென்று வெற்றியை தன் வசம் ஆக்கியுள்ளார்.

இந்த வெற்றியால் காலிறுதி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி 

வெற்றி குறித்து லக்‌ஷயா சென் கூறியதாவது: " ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்பது கனவாக உள்ளது. ஒரு சமயத்தில் ஒரே போட்டியில் மட்டும் விளையாட விரும்புகிறேன். கடந்த 2022ஐ காட்டிலும் சிறந்த முடிவை பெறுவதே எனது இலக்கு.

ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறுவதை மனதில் வைத்து விளையாடுவது கூடுதல் அழுத்தமாகவே உள்ளது" என்றார். 

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் டாப் 16 இடத்தை பிடித்தால் மட்டுமே இந்த ஆண்டில் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற முடியும். தற்போதைய நிலையில் இந்திய வீரரான எச்எஸ் பிரனாய் ஏற்கனவே தகுதி பெற்றிருக்கும் நிலையில், ஆல் இங்கிலாந்து ஓபன் லக்‌ஷயா சென்னுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராகவே அமைந்துள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்