தமிழ் செய்திகள்  /  Sports  /  All England Open 2024: Satwiksairaj-chirag Clinch Win In First Round

All England Open 2024: முதல் சுற்றில் இந்தியாவுக்கு மூன்று வெற்றி! சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, லக்‌ஷயா சென் கலக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 14, 2024 10:52 PM IST

Star Indian shuttlers Satwiksairaj Rankireddy and Chirag Shetty started their All England Open 2024 campaign with a win in the opening round of the tournament.

இந்தியா இரட்டையர்கள் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி
இந்தியா இரட்டையர்கள் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து இங்கிலாந்திலுள்ள பிரமிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் 2024 தொடரில் தற்போது இவர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்தோனேஷியா ஜோடிக்கு எதிராக வெற்றி

இதையடுத்து முதல் சுற்று போட்டியில் இந்தோனேஷியா ஜோடி முகமது அஹ்சன் மற்றும் ஹெந்திரா சேதிவான் ஆகியோரை இந்திய ஜோடி சாத்விக் - சிராக் ஆகியோர் எதிர்கொண்டனர். நல்ல பார்மில் இருந்து வரும் இவர்கள் இந்த போட்டியிலும் அதை தொடர்ந்தனர்.

21-18, 21-14 என்ற நேர் செட்களில் இந்தோனஷியா ஜோடியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்றில் மற்றொரு இந்தோனேஷியா ஜோடியான முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி மற்றும் பகாஸ் மௌலானா ஜோடியை எதிர்கொள்ள உள்ளார்கள்.

ஆல் இங்கிலாந்து ஓபன் டைட்டிலை முதல் முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா ஜோடி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.

லக்‌ஷயா சென் வெற்றி

இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் , டானிஷ் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் என்பவரை வீழத்தியுள்ளார். ஜோஹன்னசென்னுக்கு எதிரான ஆட்டத்தில் 21-14, 21-14 என நேர் செட்டில் ஆதிக்கம் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.

இதையடுத்து லக்‌ஷயாசென் தனது அடுத்த போட்டியில், மற்றொரு டானிஷ் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சென் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தோல்வி

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், இந்தோனேஷியா வீராங்கனை சிகோ ஆரா த்வி வார்டோயோ என்பவரை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 21-19, 11-21, 21-9 என போராடி இந்திய வீராங்கனை தோல்வியை தழுவினர்.

முதல் செட்டில் தோல்வியுற்று இரண்டாவது கம்பேக் கொடுத்த போதிலும், மூன்றாவது செட்டில் அதை தக்க வைக்க தவறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி

மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கேஸ்ட்ரோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, ஹாங்காங் ஜோடியான யுங் ங்கா டிங் மற்றும் யுங் புய் லாம் ஆகியோரை எதிர்கொண்டது. இந்திய மகளிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-13, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை பெற்றனர்.

இந்த வெற்றியால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தனது அடுத்த போட்டியில் இந்திய ஜோடி சீனாவின் ஜாங் ஷுசியான் மற்றும் ஜெங் யூ ஆகியோரை எதிர்கொள்ள இருக்கிறது.

மற்றொரு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான ருடாபர்னா, ஸ்வேதாபர்னா பாண்டா ஜோடி, ஜப்பான் நாட்டின் ரின் இவானாகா மற்றும் கீ நகானிஷி ஜோடிக்கு எதிரான போட்டியில் 21-9, 21-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.

ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று வெற்றிகள், இரண்டு தோல்விகள் கிடைத்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்