தமிழ் செய்திகள்  /  Sports  /  Satwik-chirag Clinches French Open 2024 Title For Second Time After Beats Chinesh Taipei Pair

French Open 2024 Final: 37 நிமிடங்கள், நேர் செட்களில் சீன தைப்பே ஜோடி காலி! சாம்பியன் ஆன இந்திய ஜோடி சாத்விக் - சிராக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 11, 2024 05:59 PM IST

சீனா தைப்பே ஜோடிகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடிகள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி நேர் செட்டில் பினிஷ் செய்து பினிஷ் செய்து கோப்பையை வென்றது.

பிரெஞ்சு ஓபன் 2024 கோப்பையுடன் சாத்விக் - சிராக்
பிரெஞ்சு ஓபன் 2024 கோப்பையுடன் சாத்விக் - சிராக்

ட்ரெண்டிங் செய்திகள்

நேர் செட்டில் வெற்றி

இதையடுத்து இரட்டையர்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, சீனா தைப்பே ஜோடி லீ ஜே-ஹூய் மற்றும் யாங் போ-ஹ்சுவான் ஆகியோரை எதிர்கொண்டனர். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்தியர்களான சாத்வித் - சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் தன் வசமாக்கினார்கள். இதைத்தொடர்ந்து இரண்டாவது செட்டில் சீனா தைப்பே வீரர்கள் கம்பேக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனாலும் இந்திய ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 21-17 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் தட்டி தூக்கியது. இதன் மூலம் 2 செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டமானது மொத்தம் 37 நிமிடங்கள் வரை நடைபெற்றது

வெற்றிக்கு பின் சிராக்கை தூக்கிய சாத்விக்

கடைசி புள்ளிகளை பெற்ற வென்ற பின்னர் இந்த ஜோடி பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் முறையாக சிராக் ஷெட்டியை, சாத்விக் தூக்கினார். சிராக் தனது கைகளை வானத்தை நோக்கிவாறு காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் சாத்விக் கையில் பேட்மிண்டன் ராக்கெட் வைத்தவாறு சிறிய நடனமும் ஆடினார்.

இந்த வெற்றியின் மூலம் சாத்விக் - சிராக் ஜோடி இரண்டாவது முறையாக பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அத்துடன் இந்த சீசனில் மொத்தம் மூன்று பைனல்களில் விளையாடியிருக்கும் இவர்கள் முதல் முறையாக டைட்டிலை வென்றுள்ளார்கள்.

இந்த ஆண்டில் மலேசியா சூப்பர் 1000, இந்தியா சூப்பர் 750 தொடர்களில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்த ஜோடி, சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 தொடரில் ரன்னர் அப் ஆனது.

முன்னதாக, இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வெல்வதற்கு தகுதியுடைய வீரர்கள் என்று இவர்களின் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் தெரிவித்திருந்தார். அந்த வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது பிரெஞ்சு ஓபன் கோப்பையை வென்று அசத்தியுள்ளார்கள்.

வெற்றி குறித்து சிராக் ஷெட்டி கூறியதாவது: "இனிமையாக உணர்கிறேன். பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. இங்கு நாங்கள் இருவரும் சிறந்த பேட்மிண்டன் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். இது எங்களுக்கு இரண்டாவது வீடு போன்றது. தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியில், களமும் பயிற்சியாக அமைந்துள்ளது. இங்குதான் இன்னும் சில மாதங்களில் ஒலிம்பிக் நடைபெற இருக்கிறது" என்றார்.

"தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு நாங்கள் இருவரும் டான்ஸ் ஆடி நீண்ட காலம் ஆகிறது. நான்கு பைனல்களுக்கு பிறகு அது நடந்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் 100 சதவீதம் அளவில் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்" என்று வெற்றிக்கு பின்னர் சாத்விக் சாய்ராஜ் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்