Archery: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் ஆளாக தகுதி பெற்ற வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவாரா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Archery: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் ஆளாக தகுதி பெற்ற வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவாரா

Archery: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் ஆளாக தகுதி பெற்ற வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவாரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 11, 2023 05:39 PM IST

வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவாரா, வில்வித்தை கான்டினென்டல் தகுதிப் போட்டியின் அரையிறுதியில் ஈரானின் முகமதுதோசைன் கோல்ஷானி அஸ்லை தோற்கடித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவாரா
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவாரா

பங்காக்கில் நடைபெற்ற வில்வித்தை கான்டினென்டல் தொடரின் அரையிறுதியில் ஈரான் வீரர் முகமதுதோசைன் கோல்ஷானி அஸ்லை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவாரா. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் சீன தைபேயின் லின் ஜிஹ்-சியாங்கிடம் 6-5 (10-9) என்ற கணக்கில் ஷூட்-ஆஃப் மூலம் தோல்வியடைந்தார் தீரஜ் பொம்மதேவாரா. இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இந்த தொடரில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான தருண்தீப் ராய் மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறினர்.

ஒலிம்பிக் தகுதி முறையின்படி, தனிநபர் மேட்ச்-ப்ளே போட்டிகளின் இறுதி நிலைகளின் அடிப்படையில் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு இரண்டு இடங்கள் வழங்கப்படும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.