தமிழ் செய்திகள்  /  Sports  /  Aiden Markram Appoined As A Captain Of Srh In Ipl 2023

Aiden Markram: சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Karthikeyan S HT Tamil
Feb 23, 2023 12:18 PM IST

Aiden Markram appoined as Captain of SRH: ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எய்டன் மார்க்ரம்
எய்டன் மார்க்ரம் (IPL)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் மிக மோசமாக விளையாடியது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்தது. 2021 ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என நம்பப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்