தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Stroke Recovery : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரா? பதற்றம் வேண்டாம்! இதோ உங்களுக்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகள்!

Stroke Recovery : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரா? பதற்றம் வேண்டாம்! இதோ உங்களுக்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகள்!

Sep 25, 2023 12:35 PM IST Priyadarshini R
Sep 25, 2023 12:35 PM , IST

Stroke Recovery : இந்த உணவுப்பழக்கங்கள் மற்றும் இந்த ஆசனங்களை பின்பற்றினால் போதும் பக்கவாதத்தில் இருந்து எளிதாக காத்துக்கொள்ளலாம் அல்லது பக்கவாதம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் விடுபடலாம். முயற்சித்து பாருங்கள். 

பல்வேறு ஆராய்ச்சிகளும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா எப்படி உதவி வந்துள்ளது என்று நிரூபித்துள்ளன. பக்கவாதத்தில் இருந்து மீள்வதற்கும், மீண்டும் வராமல் தடுப்பதற்கும் அல்லது பக்கவாதம் போன்ற நிலை ஏற்படுவதற்கும், வந்தவர்களுக்கும் தாய்ச்சி சிறந்த நிவாரணம் கொடுக்கிறது. யோகா மற்றும் தியானம் செய்யும்போது ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவை கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. பொட்டாசி சத்து நிறைந்துள்ள உணவுகள், குறிப்பாக, இனிப்புகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தக்காளி, சோயா பீன்கள், மெலன் வகை பழங்கள் ஆகியவை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு வகைகள் ஆகும். இவை ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம்தான் பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது. மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள், கீரை வகைகளுக்கு பக்கவாதத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் ஆகியவையும் நல்லது. சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த கொழுப்புகள்தான் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது. உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ரத்த அழுத்ததை அதிகரிக்கச்செய்யும். 

(1 / 8)

பல்வேறு ஆராய்ச்சிகளும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா எப்படி உதவி வந்துள்ளது என்று நிரூபித்துள்ளன. பக்கவாதத்தில் இருந்து மீள்வதற்கும், மீண்டும் வராமல் தடுப்பதற்கும் அல்லது பக்கவாதம் போன்ற நிலை ஏற்படுவதற்கும், வந்தவர்களுக்கும் தாய்ச்சி சிறந்த நிவாரணம் கொடுக்கிறது. யோகா மற்றும் தியானம் செய்யும்போது ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவை கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. பொட்டாசி சத்து நிறைந்துள்ள உணவுகள், குறிப்பாக, இனிப்புகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தக்காளி, சோயா பீன்கள், மெலன் வகை பழங்கள் ஆகியவை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு வகைகள் ஆகும். இவை ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம்தான் பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது. மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள், கீரை வகைகளுக்கு பக்கவாதத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் ஆகியவையும் நல்லது. சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த கொழுப்புகள்தான் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது. உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ரத்த அழுத்ததை அதிகரிக்கச்செய்யும். (Photo by Mor Shani on Unsplash)

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள யோகா தெரபிகள் உதவும். யோகா உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. மூச்சுப்பயிற்சிகள் உள் உறுப்புக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. தியானம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பயிற்சிகள், மூச்சு பயிற்சி, தியானம் இவை சேர்ந்ததுதான் யோகா. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா மிகவும் உதவுகிறது. அவர்களின் செயல் அதிகரிக்கவும், அவர்களின் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவுகின்றன. 

(2 / 8)

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள யோகா தெரபிகள் உதவும். யோகா உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. மூச்சுப்பயிற்சிகள் உள் உறுப்புக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. தியானம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பயிற்சிகள், மூச்சு பயிற்சி, தியானம் இவை சேர்ந்ததுதான் யோகா. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா மிகவும் உதவுகிறது. அவர்களின் செயல் அதிகரிக்கவும், அவர்களின் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவுகின்றன. (Photo by Alonso Reyes on Unsplash)

வஜ்ராசனம் - கைகளை இருபுறமும் நேராக வைத்து நேராக நின்றுகொள்ள வேண்டும். மெதுவாக காலை மடித்து வைத்து அதன் மேல் அமர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் உள்ளங்கைகளை முடியில் வைத்து நேராக அமரவேண்டும். 

(3 / 8)

வஜ்ராசனம் - கைகளை இருபுறமும் நேராக வைத்து நேராக நின்றுகொள்ள வேண்டும். மெதுவாக காலை மடித்து வைத்து அதன் மேல் அமர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் உள்ளங்கைகளை முடியில் வைத்து நேராக அமரவேண்டும். (Grand Master Akshar)

சுகாசனம் - மகிழ்ச்சியான போஸ். படத்தில் காட்டியிருப்பதுபோல் அமர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். 

(4 / 8)

சுகாசனம் - மகிழ்ச்சியான போஸ். படத்தில் காட்டியிருப்பதுபோல் அமர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். (Photo by Mor Shani on Unsplash)

தண்டாசனம் - நேராக அமரந்து, உங்கள் கால்களை நேராக உங்கள் முன்னால் நீட்டி, இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். பின்புறம் சிறிதும் வளையக்கூடாது. இடுப்புபகுதியை இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை உடலோடு ஒட்டி, உள்ளங்கை தரையில் படும்படி வைக்க வேண்டும். தோள்பட்டையை ரிலாக்ஸாக விடவேண்டும். 

(5 / 8)

தண்டாசனம் - நேராக அமரந்து, உங்கள் கால்களை நேராக உங்கள் முன்னால் நீட்டி, இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். பின்புறம் சிறிதும் வளையக்கூடாது. இடுப்புபகுதியை இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை உடலோடு ஒட்டி, உள்ளங்கை தரையில் படும்படி வைக்க வேண்டும். தோள்பட்டையை ரிலாக்ஸாக விடவேண்டும். (Twitter/UKIYENGARYOGA)

அடோமுகி சவனாசனா - பூனை போஸில் துவங்கவேண்டும். உள்ளங்கை தோள்பட்டைக்கு கீழே இருக்க வேண்டும். முழங்கால் இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும். இடுப்பை மேல் தூக்க வேண்டும். முழங்கால், முழங்கை மடங்கக்கூடாது. ஆங்கில எழுத்து A போல் இருக்க வேண்டும். உங்கள் பாதங்கள் தரையில் இருக்க வேண்டும். 

(6 / 8)

அடோமுகி சவனாசனா - பூனை போஸில் துவங்கவேண்டும். உள்ளங்கை தோள்பட்டைக்கு கீழே இருக்க வேண்டும். முழங்கால் இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும். இடுப்பை மேல் தூக்க வேண்டும். முழங்கால், முழங்கை மடங்கக்கூடாது. ஆங்கில எழுத்து A போல் இருக்க வேண்டும். உங்கள் பாதங்கள் தரையில் இருக்க வேண்டும். (Photo by Himalayan Siddhaa Akshar)

விருக்ஷாசனா - மரம் போல் இருக்க வேண்டும். ஒரு காலை மற்றொரு காலின் தொடை பகுதியில் வைக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட வேண்டும். நேராக ஆடாமல் நிற்க வேண்டும். 

(7 / 8)

விருக்ஷாசனா - மரம் போல் இருக்க வேண்டும். ஒரு காலை மற்றொரு காலின் தொடை பகுதியில் வைக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட வேண்டும். நேராக ஆடாமல் நிற்க வேண்டும். (Pexels)

பக்கவாதத்தில் இருந்து விடுபட உங்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம். ஏனெனில் அது அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிறது. அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுகிறது. எனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சோர்ந்துவிடாமல், தேவையான யோகாவை செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

(8 / 8)

பக்கவாதத்தில் இருந்து விடுபட உங்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம். ஏனெனில் அது அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிறது. அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுகிறது. எனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சோர்ந்துவிடாமல், தேவையான யோகாவை செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். (Photo by Scott Broome on Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்