தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Costliest Mango: ஒரு மாம்பழம் ரூ. 3 ஆயிரம், ஒரு கிலோ ரூ. 12 ஆயிரம்..! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாம்பழத்தில்?

Costliest Mango: ஒரு மாம்பழம் ரூ. 3 ஆயிரம், ஒரு கிலோ ரூ. 12 ஆயிரம்..! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாம்பழத்தில்?

Apr 26, 2024 08:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 26, 2024 08:50 PM , IST

  • கோடை காலம் மாம்பழங்களின் சீசனாக இருந்து வரும் நிலையில் அதன் விலையானது கிலோவுக்கு ரூ. 1000 வரை கூட விற்பனை செய்யக்கூடும். ஆனால் குறிப்பிட்ட ரக மாம்பழம் ஒன்றின் விலையே ரூ. 3 ஆயிரம் என விற்கப்படுகிறது. சுவை மிகுந்த மாம்பழ ரகங்களும் அதன் விலைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

மாம்பழத்தில் பல்வேறு ரகங்கள் இருந்து இருந்து வருகின்றன. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவத்தை தன்னகத்தே வைத்துள்ளது. விளைச்சலில் குறைவாக இருந்து வரும் சிந்தி ரக மாம்பழம் பெங்களுரு மார்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இது விலையை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்துபோவதை யாராலும் தடுக்க முடியாது

(1 / 7)

மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் சில ரக மாம்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ. 500 வரை விற்கப்படுகிறது. ஆனால் சிந்தி ரக மாம்பழம் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரம் எனவும், ஒரு கிலோ ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்கப்படுவது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது

(2 / 7)

இந்த மாம்பழங்கள் பாகிஸ்தான் நாட்டின் சிந்தி பகுதிகளில் விளைவிக்கப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் நறுமணத்துக்கு பெயர் பெற்றதாக உள்ளது

(3 / 7)

பாகிஸ்தானை போல் இந்தியாவிலும் இந்த மாம்பழம் பிரபலமானதாக இருந்து வருகிறது. பெரிய சைஸ், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் சிந்தி பகுதியில் இருக்கும் மணல், தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப மிகுதியான சுவை கொண்டதாக உள்ளது

(4 / 7)

சிந்தி மாம்பழத்தை போல், மேற்கு வங்கம் மாநிலம் மூர்ஷிதபாத்தை சேர்ந்த கோகிடூர் மாம்பழமும் புகழ் பெற்றதாக உள்ளது. இதன் விலையும் ரூ. 3 ஆயிரம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது

(5 / 7)

இந்தியாவில் மிகவும் பிரபலமான, சுவைமிக்க மாம்பழமாக அல்போன்சோ மாம்பழம் இருந்து வருகிறது. ரத்னகிரி கடலோர பகுதிகளிலும், மேற்கு இந்தியாவில் கொங்கன் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. தெற்கு குஜராத் பகுதிகளிலும் இந்த மாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. இதன் விலையானது கிலோ ரூ. 1,500 வரை விற்கப்படுகிறது

(6 / 7)

நூர்ஜகான், மியாஸாகி போன்ற மாம்பழ ரகங்கள் அதன் சுவையினால் பலராலும் விரும்பி சாப்பிடக்கூடிய மாம்பழமாக இருக்கிறது. இதன் விலை கிலோவுக்கு ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்