Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்
Vladimir Putin: மிகைல் மிஷுஸ்டினின் மறுநியமனம் அரசியல் பார்வையாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது, புதின் அவரது திறமையைப் பாராட்டினார். ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான மிஷுஸ்டின், செவ்வாயன்று தனது அமைச்சரவையின் ராஜினாமாவை, சமர்ப்பித்து இருந்தார்.
Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புடின் நியமித்தார் (via REUTERS)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை மைக்கேல் மிஷுஸ்டினை நாட்டின் பிரதமராக மீண்டும் நியமித்தார்.
ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான மிஷுஸ்டின், செவ்வாயன்று தனது அமைச்சரவையின் ராஜினாமாவை, சமர்ப்பித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் பிரதமராக நிமயிக்கப்பட்டுள்ளார்.
மிஷுஸ்டினின் மறுநியமனம் அரசியல் பார்வையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, புதின் அவரது திறமைகளைப் பாராட்டினார் என்று குறிப்பிட்டார். ரஷ்யாவின் வரிச் சேவையின் முன்னாள் தலைவரான மிஷுஸ்டின், தனது முந்தைய பதவிக் காலத்தில் அரசியல் அறிக்கைகளைத் தவிர்த்து, ஊடக நேர்காணல்களைத் தவிர்த்தார்.
