உலகக் கோப்பை கால்பந்து: ஐரோப்பா ஒன்றியத்தில் போர்ச்சுகல், போலாந்து தகுதி
வடக்கு மேசிடோனியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி வீரர் ப்ரூனோ பெர்ணான்டஸ் இரண்டு அற்புதமான கோல்கள் மூலம் தனது உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஐரோப்ப ஒன்றியத்தை சேர்ந்த மற்றொரு அணியான போலந்தும் தகுதி பெற்றுள்ளது.

இத்தாலியை வீழ்த்திய வடக்கு மேசிடோனியா - போர்ச்சுகல் இடையேயான பிளே ஆப் போட்டி போர்டோ நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும் என்கிற நிலையில், ஆட்டமானது மிகவும் பரபரப்பாக இருந்தது.
ஆட்டம் தொடங்கிய முதல் 30 நிமிடம் வரை கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ, நட்சத்திர வீரர் தியோகோ ஜோடா ஆகியோர் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பின்னர் பெர்னான்டஸ் அவர்களோடு இணைந்து உறுதுணை அளித்தார்.
இதன் விளைவாக அடுத்த இரண்டு நிமிடங்களில் ப்ருனோ பெர்னான்டஸ் அற்புத ஷாட் மூலம் போர்ச்சுகலுக்கு ஒரு கோல் கிடைத்தது. தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்திய போர்ச்சுகல் வீரர்கள் வடக்கு மேசிடோமியா வீரர்களுக்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் துல்லியமாக பந்தை பாஸ் செய்து விளையாடினர்.