தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Uttarpradesh Teacher Drills Into 9-year-old Student's Palm As He Forgets Tables

UP Teacher punishment: ஷாக்..உ.பியில் கொடூரம்.. மாணவனுக்கு ஆசியரின் கொடூர தண்டனை

Divya Sekar HT Tamil
Nov 27, 2022 09:14 AM IST

கான்பூரில் இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவனுக்கு ஆசியரின் கொடூர தண்டனை
மாணவனுக்கு ஆசியரின் கொடூர தண்டனை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி 2-ஆம் வாய்பாட்டை மாணவன் விவானை ஆசிரியர் சொல்ல சொல்லியுள்ளார். ஆனால் விவான் மனப்பாடமாக ஒப்பிக்காததால் ஆசிரியர் அனுஜ் பாண்டே ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாணவனை காயப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவர் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று பள்ளியின் முன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடிப்படைக் கல்வி அதிகாரி சுர்ஜித் குமார் சிங், சிறுவனின் பெற்றோரை பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர், ஆசிரியர் அனுஜ் பாண்டேவை பணியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்ததுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவன் விவான் கூறுகையில், “அனுஜ் சார் என்னை இரண்டாம் வாய்ப்பாட்டை சொல்லச் சொன்னார். நான் சரியாகப் செல்லவில்லை. இதற்காக அவர் எனது இடது கையில் ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தை இயக்கினார். என் நண்பன் கிருஷ்ணா, இயந்திரத்தை நிறுத்துவதற்காக பிளக்கை வெளியே இழுத்தார். ஆனால் அதற்குள் என் கையில் காயம் ஏற்பட்டது,”எனத் தெரிவித்துள்ளான்.

இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்